தென் மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

 Wednesday, October 9, 2019  08:24 PM

மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடைமழை (கனமழை) பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-

yt_custom

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் ஏற்காட்டில் 11 செ.மீ, கொடைக்கானலில் 6 செ.மீ மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
fb_right
Insta_right
mobile_App_right
Twitter_Right