செட்டிநாட்டு பருப்பு ரசம் செய்யலாம் வாங்க...

 Wednesday, October 9, 2019  07:30 PM

உங்கள் சுவையை தூண்டும் செட்டிநாட்டு பருப்பு ரசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான செட்டிநாட்டு பருப்பு ரசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

கருவேப்பிலை, கொத்தமல்லி
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வற்றல் - 2
புளி - 1 நெல்லிக்காய் அளவு


துவரம் பருப்பு - 1/4 கப்
பூண்டு - 4 பல் (தட்டியது)
உப்பு

செய்முறை :

முதலில் பருப்பை வேக வைத்து அந்த தண்ணீர் 2 கப் எடுத்து வைக்கவும். புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் மிளகாய் வற்றல், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிவக்க விடவும்.

இப்போது அதில் நறுக்கிய தக்காளி, தட்டி வைத்த பூண்டு சேர்த்து பிரட்டவும். தீயை சுத்தமாக குறைத்து ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.

உடனே பருப்பு தண்ணி, புளி தண்ணி, உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுக்கவும்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2