ஜி.டி.நாயுடுவின் கல்விக் கொள்கைகள் - ஒரு சிறப்பு பார்வை

 Wednesday, October 9, 2019  06:30 PM

திரு. நாயுடு அவர்களின் கல்விக் கொள்கைகள் சிலவற்றைக் காண்போம்:

'பாட திட்டத்தில் மாணவர்களுக்குத் தேவையற்ற பகுதிகள் எவ்வளவோ இருக்கின்றன. கலந்துள்ள அந்தப் பகுதிகளை நீக்கி விட்டுப் பாடங்களைச் சுருக்கமாகவும், இனிமையாகவும் இருக்கும்படிச் செய்ய வேண்டும். ஏட்டுப் படிப்பை எடுத்துவிட வேண்டும். நேரடிப் பயிற்சியாகவே எல்லா போதனைகளும் அமைய வேண்டும்.

தொழிற் கல்விதான் முதல் தேவை. அதுதான் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். மக்களி டையே உள்ள வறுமைகளை நீக்கும். நாட்டை முன்னேற்று விக்கும், பலவிதத் தொழில் வளங்கள் நாட்டில் பெருக்கும். ஒவ்வொரு படிப்புக்கும் தேவையான காலத்தை ஆண்டுக் கணக்கிலிருந்து மாதக் கணக்கிற்குக் குறைத்து விட வேண்டும்.

கல்வித் துறையில் திரைப்படம் சக்தியைப் பெரு மளவில் பயன் படுத்தலாம். கல்விக் கோட்டங்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை விட வேண்டும். ஆண்டுக்கு 52 நாட்கள் விடுமுறை விடுத்தாலே போதுமானது. அதிகப்படியான விடுமுறைகளை மாணவர்களுக்கு விடுத்தால், அவர்களது கல்வி நோக்கம், கவனம் சீர்குலையும் எனவே, அதிக நாட்கள் விடுமுறை தேவையற்றது.

மாணவர்களுக்கு காலையிலும் - மாலையிலும், இரவிலும் கல்வி வகுப்புகள் நடத்தப் படல் வேண்டும்; அதே நேரத்தில் இடையிடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாய உணவு விடுதியிலேயே தங்க வேண்டும். அவர்கள் செலவுக்குத் தேவையான பணத்தைக் கல்வி நிலையத்தில் வேலை பார்த்தே வருவாய் பெறலாம். மாணவர்களது எண்ணங்கள், களியாட்டப் பொழுதுப் போக்குகளிலும், வீண் விதண்டா வாத சச்சரவுகளிலும் ஈடு படாதபடி வேலைகளை அதிகமாக வாங்கலாம், அது நல்லதும் கூட!

வேலையை அவ்வாறு அவர்களிடம் பெறுவதின் மூலம், அவ்வப்போது அவர்களிடம் கட்டுப்பாடு, நல்லொழுக்கம், பொறுப்புணர்ச்சிகள், அன்புப் பரிமாற்றங் கள். நன்மைகளைச் சிந்திக்கும் சிந்தனைகள் தோன்றும். தான் தோன்றித் தனம், ஒத்துழையாமை உணர்வுகள் ஓடி மறையும்.

இவை மட்டுமே போதா. ஆண்டாண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் அதனதன் திறமை, நன் நடத்தை, மாணவர்களது முற்போக்குச் சிந்தனைகளை நாட்டும் பொருட்காட்சிச் சாலைகளை நடத்துவது நல்லது.

அவற்றை நடத்துவதற்கு மாணவர்களுக்குப் போதிய அக்கறையையும், பொறுப்புணர்ச்சியையும் அந்த பள்ளிக் கல்வி உருவாக்க வேண்டும்.

கல்விக் கோட்டங்களில் ஆசிரியர்களை குறைவாகவே நியமிக்கப் படல் வேண்டும். அவர்கள் எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளாக இருத்தல் வேண்டும். அவர்களுடைய பணி, மாணவர்கள் முன்னேற வழிகாட்டுவதே ஒழிய, பள்ளிகளுக்கு வந்து தமிழ்ப் பாடத்தை ஏற்றுப் பாட்டுகளைப் போல ஏற இறங்கப் பாடுவதும், மற்ற பாடங்களை மாணாக்கர், மாணாக்கியர்போல மனனம் செய்ததை சொற்பொழிவாற்றுவதுமே ஆசிரியர்கள் பணிகளல்ல!

கலைக் கல்லூரிகள் துவக்கப்படுவதை ஓரளவோடு நிறுத்திக் கொண்டு, தொழிற் கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அரசாங்கமே அமைத்து நடத்தப் படல் வேண்டும். அவைதான் மாணவர்களுக்குரிய வாழ்க்கைப் பயிற்சியை அளிக்கும். மடி தவழ்ந்த மாணவர்களாக மாறார்!

Real_Ad7


ஏட்டுக் கல்விக்கு அங்கே முக்கியத்துவம் இல்லாமையால், மாணவர்களின் உடலும்-உள்ளமும் உருக்குலையா. கண்விழித்து அவர்கள் நீண்ட நேரம் மனப் பாடம் செய்யவோ, படிக்கவோ ஒன்றுமில்லை. வாழ்க்கையும்-கல்வியும் ஒன்றாக இணையும் இடம் பல்கலைக் கழகமாதலால், அங்கே கடமையும், பொறுப்பு உணர்ச்சியும் வளரும். என்பதே உண்மை.

தொழிலியல் துறை விஞ்ஞானியாக மட்டுமே விளங்கி வந்த ஜி. டி. நாயுடு அவர்கள், தோன்றிய துறையான கல்வித் துறையிலும் புகழ்மிக்க சிந்தனையாளராக அறிமுகமாகி, தனது புகழ்க் கொடியை கல்வித் துறையிலும் நாடளாவ, அறிவளாவ பறக்க விட்டுக் கொண்டிருந்தார். தனக்கென சில உயர்ந்தக் கொள்கைகளை வகுத்துக் கொண்ட கல்விக் கோமாக விளங்கியவர் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள்.

திரைப் படத் துறையை கல்விக்குப் பயன் படுத்தலாம் என்றும் அவர் யோசனை கூறினார். கல்விக்குரிய வளர்ச்சியை திரைப்படத்தின் மூலமும் ஆற்ற முடியும் என்றார் அவர்.

திரைப்படம் மூலம் : கல்விப் பயிற்சி!

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை பேசும்போது, 'நான்கு திரைப் படங்களை சென்சார் செய்ய மாட்டேன் என்று மத்திய அரசும், மாநில அரசும், எனக்கு வாக்களிக்குமானால், நான் நிச்சயமாகத் திராவிட நாட்டைப் பெற்றுத் தருவேன்.'

'அந்த எனது எண்ணத்தை மக்கள் இடையே திரைப்படமாக்கிக் காட்டி நியாயங்களை உணர்த்துவேன். நிச்சயமாக மக்கள் ஆதரவு எனக்குக் கிடைக்கும்' என்று குறிப்பிட்டார்.

இந்த எண்ணம் திரு. ஜி. டி. நாயுடு அவர்களது கல்விக் கொள்கையைப் போல இருக்கின்றதல்லவா? எனவே, திரைப் படத்தின் மூலம் அறிவுப் பிரச்சாரம் செய்தால் அது உறுதியாக உள்ளத்தைத் துளைத்து ஊடுருவி மக்களைச் சிந்திக்க வைக்கும் தானே!

தனது ஆறுவாரம் பொறியியல் பயிற்சி வகுப்பை, திரு. ஜி. டி. நாயுடு அவர்கள், அப்படியே கட்டம் கட்டமாகத் திரைப்பட மாக்கிடத் திட்டமிட்டார்.

இந்தத் திரைப் படத்தை உலக அரங்குகளில் வெளியிட்டுக் காட்ட விரும்பினார். அதற்கு என்ன செலவாகும் என்று திரையுலகினருடன் கணக்கிட்டதில், அப்போதைய கால அளவுச் செலவிலே ஐந்து லட்சம் ரூபாயாகும் என்று கணக்கிடப்பட்டது.

பணத்துக்காக ஜி. டி. நாயுடு வருத்தபடவில்லை. செலவழிக்கத் தயாராகவே இருந்தார். ஆனால், அப்போது படம் எடுக்கும் கச்சா படச் சுருள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. தேவையான படச் சுருள் நாயுடு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால், படமெடுக்கும் முயற்சியை திரு. ஜி. டி. நாயுடு கைவிட்டு, மேற் கொண்ட தொழிற் கல்வித்துறை பணிகளிலே ஈடுபட்டு உழைத்தார்.


Real_Ad5

Real_Ad8


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad9
Real_Ad1
Website Square Vanavil2
Real_Right3
Real_Right2