திருப்பூரும்... கருணாநிதியும்!

 Wednesday, October 9, 2019  04:30 PM

திருப்பூர் இன்று சர்வதேச அளவில், ஏற்றுமதி தொழில் நகரமாக விளங்குகிறது. பின்னலாடை துறையினர் மற்றும் தொழிலாளர்களின் அளவு கடந்த உழைப்பால், 'டாலர் சிட்டி' என்று அழைக்கப்படுகிறது.

திருப்பூரின் வளர்ச்சியில், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தி.மு.க., ஆட்சியின் போதுதான், திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 52 வார்டுகளுடன் இருந்த நகராட்சியை மாநகராட்சியாக, தரம் உயர்த்தி அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

அதற்கான விழா, 2007ல், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. பங்கேற்ற கருணாநிதி, திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் என மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்தார். அதன்படி, 2009ல், திருப்பூர் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. மடத்துக்குளம் தாலுகா உள்ளிட்ட வருவாய்த் துறை மாற்றங்களும், கருணாநிதியால் திருப்பூர் மாவட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்டது.


மிக குறுகலாக இருந்த திருப்பூர் ரயில்வே மேம்பாலம் கருணாநிதி ஆட்சியின் போது தான் அகலப்படுத்தி புதிதாக கட்டப்பட்டது. அதே போல், ஊத்துக்குளி, வஞ்சிபாளையம் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள், அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை.

இது தவிர நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே பாதை ஆகியவற்றின் மீது, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில் அமைந்து வரும் உயர் மட்டப் பாலங்கள், நொய்யல் ஆற்றின் மீது மங்கலம் மற்றும் சாமளாபுரம் பகுதிகளில் கட்டியுள்ள உயர் மட்டப் பாலங்கள்; டி.எம்.எப்., சுரங்கப் பாலம் ஆகியனவும், அவரது ஆட்சிக் காலத்தில் திருப்பூருக்கு அளிக்கப்பட்ட திட்டங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

பெண்களுக்கான எல்.ஆர்.ஜி.., மகளிர் கலைக்கல்லுாரி, தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது. l திருப்பூர் மாவட்டம் உருவான போது, உடுமலை பகுதி மக்கள் தங்கள் பகுதியை கோவை மாவட்டத்திலேயே இணைந்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், திருப்பூர் மாவட்டத்துக்கு என தனியாக குடிநீர் ஆதாரம் இல்லாமல் போய்விடும், என ஏற்க மறுத்தார் கருணாநிதி. அதன்பின், இந்த கோரிக்கை திரும்ப பெறப்பட்டது. அவரது நடவடிக்கையால், மாவட்டத்துக்கான குடிநீர் ஆதாரம் கை நழுவாமல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. l கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, திருப்பூர், உட்பட நான்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக கருணாநிதி திருப்பூரில் பிரசாரம் செய்தார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2