இன்றைய தினம் - அக்டோபர் 9

 Wednesday, October 9, 2019  12:30 AM

உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9-ல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்

1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987) பிறந்த தினம்

1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998) பிறந்த தினம்

2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.

1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1790 – அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1874 – அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.

1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927) பிறந்த தினம்

1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்

1989 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (பி. 1922) நினைவு தினம்

2010 – எஸ். எஸ். சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி நினைவு தினம்

2015 – என். ரமணி, தமிழகப் புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934) நினைவு தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2