சத்தான பச்சைப் பயறு சுண்டல் செய்யலாம் வாங்க....

 Tuesday, October 8, 2019  07:30 PM

அதிகளவு சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

பச்சைப் பயறு - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)

தாளிக்க:

எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.


yt_custom
செய்முறை:

பச்சைப் பயறை வெறும் கடாயில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.

நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.

தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

சூப்பரான சத்தான பச்சைப் பயறு சுண்டல் ரெடி.yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Telegram_Side
mobile_App_right
Twitter_Right
fb_right