இன்றைய தினம் - அக்டோபர் 8

 Tuesday, October 8, 2019  06:27 AM

இந்திய வான்படை தினம்

இந்திய வான்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.

இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.

1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930) நினைவு தினம்

1979 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902) நினைவு தினம்

1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..

1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.2005 – காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.

2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.

1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.

1974 – பி. ஆர். பந்துலு, தென்னிந்திய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் (பி. 1911) நினைவு தினம்

1958 – திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1879) நினைவு தினம்

1926 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (இ. 1996) பிறந்த தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1