சுற்றுலாவை இனிமையாக கொண்டாட சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு வாங்க...

 Saturday, September 14, 2019  08:30 PM

இயற்கை வரைந்த ஓவியத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், வால்பாறை கடல்மட்டத்திலிருந்து, 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் இதன் மலைப்பகுதியில் பசுமை மாறாக்காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், அணைகளும், பசுமையான தேயிலைத்தோட்டங்களும், பிரசித்தி பெற்ற கோவில்களும், பகல் நேரத்திலேயே சுற்றுலாப்பயணிகளை நோட்டமிடும் உலகின் அரிய வகை வனவிலங்குகளான சிங்கவால்குரங்கு, வரையாடுகளையும் வழி நெடுகிலும் காணலாம். ஆழியாறிலிருந்து, 40 கொண்டை ஊசி வளைவுகளின் மத்தியில் வளைந்து நெளிந்து செல்லும் அழகான ரோட்டில், மிக உயரமான இடத்தில், எப்போதும் பனிமூட்டத்துடன் காணப்படும் கவர்க்கல் பகுதி, அங்கு வருபவர்களின் மனதை வருடுகிறது.வால்பாறை நகரிலிருந்து, 21 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது மேல்நீராறு அணை.

Real_Custom1

இந்த அணை சோலையாறு அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகும். இப்பகுதியில் தான், தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிக அளவில் மழை பொழிகிறது. இதனால் இந்தப்பகுதி 'தமிழகத்தின் சிரபுஞ்சி' என்றழைக்கப்படுகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்யக்கூடியாக இடம் வால்பாறை தான். வால்பாறை அடுத்துள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு வருவோர் டிரக்கிங் செல்ல, வனத்துறையினர் அவர்களிடம் கட்டணமாக, 125 ரூபாய் வசூலிக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில், திகில் நிறைந்த பகுதியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியைக்காண அதிக அளவில் வருகின்றனர்.


Real_Ad8

Real_Ad7


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Real_Right3
Real_Ad1
Real_Right2
Real_Ad9