அன்னூரில் மழை; பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி

 Wednesday, September 11, 2019  06:01 PM

தற்போது அன்னூரில் நல்ல மழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்



கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 மாதமாக மழை பெய்துவந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் வாட்டி வந்தது. தற்போது மதியம் முதலே கோவை கிழக்கு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.. அன்னூர், கருமத்தம்பட்டி, அவிநாசி, சின்னியம்பாளையம் சுற்றுவட்டப்பகுதிகளில் மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்துவருகிறது..

மழையை எதிர்பார்த்து காத்திருந்த சோளம், தட்டைப்பயறு போன்ற பயறுவகைகளை விதைத்த வானம் பார்த்த பூமி விவசாயிகள் இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. அன்னூரில் நிலவி வந்த வெப்பம் தணிந்தது..






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2
Website Square Vanavil2