வவ்வாலுக்கு வாழ்வு தரும் கோவை இளைஞர்கள்

 Wednesday, September 11, 2019  04:30 PM

கல்லுாரி விட்டால் நண்பர்களுடன் பைக்கில் வீலிங், சாலையில் நடந்து செல்பவர்களை அலற வைக்கம் கார் ரேஸ், வீட்டுக்குச் சென்றால் வாட்ஸ் ஆப், பேஸ்புக்...இப்படித்தான் சில இளைஞர்களின் தினசரி பொழுது கரைகிறது. இவர்கள் மத்தியில் வாழ்பவர்கள்தான், கருமத்தம்பட்டி அருகில் உள்ள, கிட்டாம்பாளையம் இளைஞர்கள்.

இவர்களுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட, சமாச்சாரங்கள் பரிச்சயம் உண்டு என்றாலும், அதையும் தாண்டி நாம் வாழும் சூழலை பாதுகாப்பதில் நிறைய அக்கறை உண்டு. மரக்கன்றுகளை நட்டு பசுமை வனம் உருவாக்கி வருகின்றனர், இந்த அபார இளைஞர்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமல்லாமல், தங்கள் ஊரில் உள்ள வவ்வால்களை பாதுகாப்பதிலும் ஆர்வம் உள்ளவர்கள் இவர்கள். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மரங்களில், நுாற்றுக்கணக்கான வவ்வால்கள் வசிக்கின்றன. பட்டாசு வெடித்தால், வவ்வால்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிடும் என்பதால், தீபாவளி பண்டிகைக்கு இக்கிராம மக்கள் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.


Real_Ads6
தற்போது மரங்களை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எதிர்காலத்தில் மரங்கள் இல்லாமல் போய்விட்டால், வவ்வால்களின் வசிப்பிடம் கேள்விக்குறியாகி விடும் என்பதால், இந்த பசுமை இளைஞர்கள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கிட்டாம்பாளையம் - வடுகபாளையம் சாலையில் உள்ள, 2.5 ஏக்கர் நிலத்தில், மரக்கன்றுகளை நட்டு, 'பசுமை வனம்' உருவாக்கி வருகின்றனர். பலரின் ஒத்துழைப்புடன், நீண்ட காலம் பயன் தரும், 350 மரக்கன்றுகளை அங்கு நடவு செய்துள்ளனர்.

பசுமை வனத்தின் துாய காற்றை சுவாசிக்க காத்திருக்கும் இந்த இளைஞர்களின் அடுத்த லட்சியம், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே போல் பயன் தரும் மரக்கன்றுகளை நட்டு, பசுமைப்பரப்பை பரவலாக்குவதுதான்.

கிட்டாம்பாளையத்தை சேர்ந்த கனகசபாபதி கூறுகையில், 'நம்மை சுற்றி பசுமை இருந்தால், மனது மகிழ்ச்சி அடைவதை போல, பறவைகளுக்கும் பசுமை தேவை. அதை கருத்தில் கொண்டு, 'பசுமை வனம்' உருவாக்கியுள்ளோம். சுற்றுச்சூழலுக்கும், மண்ணுக்கும், மனிதனுக்கும் பலனளிக்கும் ஆல், அத்தி, அரசு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். சொட்டு நீர் அமைத்துள்ளோம். வாரந்தோறும் ஞாயிறு காலை, 7:00 முதல், 9:00 மணி வரை இளைஞர்கள் கூடி, வனத்தில் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறோம்,'' என்றார்.


Real_Custom1

Real_Ad5


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad1
Real_Right2
arunhitech_sqr1
Arunsqr4
Website Square Vanavil2
Arunhitech_sqr2