சர்வதேச அளவுல இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தருவேன் - வீல்சேர் வாள் வீச்சில் அசத்தும் தீபிகா ராணி

 Wednesday, September 11, 2019  02:30 PM

கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ளது உருமாண்டம்பாளையம் கிராமத்தில் இங்கு ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வரும் திரு. ராமநாதன் திருமதி. ரோஸிலின், புதல்வி புதல்வி செல்வி.தீபிகாராணி B.Com-PA. வீல்சேர் வாள் வீச்சில் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்திவருகிறார்.

இவர் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாள்வீச்சு '12th Wheelchair Fencing National Championship - 2019 போட்டியில் பங்கேற்று SABRE Team பிரிவில் தங்கம் பதக்கமும் மற்றும் Foil Team பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

மேலும் அடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார் வீரமங்கை தீபிகாராணி. தேசியளவில் நடைபெற்ற போட்டிகளில் போதிய தற்காப்பு சாதனங்களும், விளையாடு உபகரணங்களும் இல்லாமல் சக வீரர்களிடம் பெற்று கொண்டே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

தற்போது சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ள தீபிகாராணி போதிய தற்காப்பு சாதனங்களும், விளையாடு உபகரணங்களும் வேண்டி கோவை மாவட்ட கலெக்டர் திரு. ராஜாமணி அவர்களிடம் மனு வழங்கினார். உபகரணங்கள் வாங்க தேவையான தொகை ரூபாய் 1,57,000 லட்சம் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவரின் அடுத்தகட்ட நகர்வு கடினமாகவே இருந்தது.அந்த வேலையில் அந்த பகுதி மக்கள் மூலம் தகவலறிந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவருமான காளப்பட்டியை சார்ந்த திரு. பையாக்கவுண்டர்(PK) அவர்கள் செல்வி. தீபிகாராணியை நேரில் சென்று பாராட்டி வாழ்த்தியும் அவரின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு தேவையான உபகரணங்கள் வாங்க மொத்த செலவுகளையும் தானே ஏற்பதாக குடும்பத்தினாரிடம் தெரிவித்தார்

அந்த வகையில் 5-9-2019 அன்று பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக தலைவர் மற்றும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரில் அழைத்து சென்று ரூபாய் 1,30,000 உதவித் தொகையை தீபிகாராணியிடம் வழங்கினார். இதன் மூலம் அவரின் குடும்பத்தினரும், பயற்சியாளர்களும், ஊர்பொது மக்களும், சக வீரர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து தீபிகா ராணி கூறும்போது..

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பா, சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் சண்டை போட்டியில் தங்கம், வெள்ளி ஜெயிச்சுருக்கேன். வாள் சண்டைக்குத் தேவையான எக்யூப்மென்ட்ஸ் எதுவுமே சொந்தமா என்கிட்ட இல்ல. கடன் வாங்கித்தான் போட்டியில் கலந்துகிட்டேன். சொந்தமா எக்யூப்மென்ட்ஸ் வாங்குற அளவு வசதியும் இல்லை. அரசாங்கமோ தன்னார்வலர்களோ உதவி செஞ்சா சர்வதேச அளவுல இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தருவேன். என கூறினார் ..

நன்றி - பயிற்சியாளர்: ஆல்பர்ட் பிரேம்குமார்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2