இன்றைய தினம் -- செப்டம்பர் 11

 Wednesday, September 11, 2019  07:08 AM

2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

1921 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1882) நினைவு தினம்

1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது

1802 – பிரான்சு சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.

1934 – தினமணி நாளிதழ் வெளியிடப்பட்டது.

1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.1997 – நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.

2015 – சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தர்.

1874 – எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார், இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1941) பிறந்த தினம்

1889 – ப. சுப்பராயன், சென்னை மாகாண முதல்வர் (இ. 1962) பிறந்த தினம்

1895 – வினோபா பாவே, இந்திய மெய்யியலாளர், காந்தியவாதி (இ. 1982) பிறந்த தினம்

1911 – லாலா அமர்நாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2000) பிறந்த தினம்

1948 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (பி. 1876) நினைவு தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1