நமது பாரம்பரிய உணவை பறைசாற்றும் நல்லசோறு அமைப்பு - ராஜமுருகன்

 Sunday, September 8, 2019  08:30 PM

இது வரும் தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக வாழ ஏற்படுத்தப்பட அமைப்பு. துரித உலகில் அனைத்தும் துரிதமாக நடக்க, துரித உணவுகள் உண்டு, துரிதமாக இவ்வுலகை விட்டு விலகும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலனை கருத்தி கொண்டு, அவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்க ஏற்படுத்தப்பட்டது தான் நல்லசோறு.

உலக மயமாக்கல் வழியாக உள்ளே நுழைந்த அயல் நாட்டு உணவுகளின் தீங்கினை வலியுறுத்தி, நமது பாரம்பரிய உணவுகளின் அருமையை எடுத்துரைத்து, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மீண்டும் பாரம்பரிய, இயற்கை உணவுகளை கொண்டு சேர்த்து, அதன் மூலம் மக்கள் நலம், மண் வளம் மற்றும் விவசாயிக்களின் நலன் பாதுக்காப்பதே இவ்வமைப்பின் அடிப்படை நோய்க்கமாகும்.

பசுமை புரட்சியின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளாக இரசாயன உரமேற்றப்பட்ட அரிசியையும், கோதுமையையும், காய்கறிகளையும் மட்டுமே அறிமுகமான இன்றைய தலைமுறையினர், அதன் விளைவாக பெருவியாதிகளில் சிக்கி உள்ளனர். இன்றைய குழந்தைகள் அதற்கும் ஒரு படி மேலே போய், அரிசி உணவையும் மறந்து பீட்சா, பர்கர் என உடலுக்கு நலனிற்கு சிறிதும் துணை போகாத உணவுகளை எடுத்து வருகின்றனர். இதன் விளைவாக ஹார்மோன் பிரச்சனை, மிக சிறிய வயதிலேயே பூப்படைதல், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய்க்கும் ஆளாகியுள்ளனர். இவை மட்டுமின்றி குழந்தை உருவாக்குவதே பிரச்சனையாகி, அதிக செயற்கை கருஉற்பத்தி மையங்கள் பெருகி உள்ளன. வளர்ந்து வரும் சமன்படுத்தப்படாத பொருளாதார வளர்ச்சி, ஒரு சிலருக்கான லாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமல் அவர்களை அழிவு பாதைக்கு தள்ளி கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் சீரழிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், மக்களுக்கு நம் பாரம்பரிய உணவுகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவ்வுணகளை சுவையாக குடும்பத்தினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு தயாரிப்பது பற்றி எடுத்துரைப்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில், இரசாயன் உரங்களையும், பூச்சி கொள்ளியையும் இட்டு மண்ணில் உள்ள நுண் உயிர்களையும், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் கொன்று மண்ணை மலடாக்கி மிக பெரிய சூழ்நிலை சீர்கேட்டை உருவாக்கி உள்ளோம். ஆனால் சிறுதானியமானது குறைந்த நீர் தேவையிலேயே நம் பாரம்பரிய விவசாய முறையிலேயே நன்றாக வளரக்கூடியது. இவ்வாறு சிறுதானிய உற்பத்தியை மற்றும் தேவையை பெருக்குவதன் மூலம் மண்வளம், மக்கள் நலம் பாதுகாக்கபடுகிறது. இது வரை இரசாயன உரங்களையும், மரபணு மாற்று விதைகளை மட்டுமே நம்பி அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு இது ஒரு நம்பிக்கையான மாற்று விவசாயம். விவசாயிகளுக்கிடையே இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது இவ்வமைப்பின் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும்.

நல்லசோறு அமைப்பின் பணிகள் :

1. பள்ளி குழந்தைகளுக்கு சிறுதானியத்தின் அவசியத்தை பரப்புதல்.

2. பொது மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோருக்கு சிறுதானிய உணவு செய்முறை பயிலரங்கம் நடத்துதல்.

3. கருத்தரங்குகளில் இயற்கை முறை சிறுதானிய விவசாயத்தை அறிவுறுத்துதல்.4. விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்திக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல்.

5. ஊடகங்கள் மற்றும் தொடர்பியல் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

6. சிறுதானிய உணவுத்திருவிழா நடத்துதல்.

இவ்வாறு அனைத்து வர்க்க மக்களிடமும் மக்கள் நலம், மண் வளம் மற்றும் விவசாயி நலன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

ராஜமுருகனை பற்றி :

சொகுசான வேலை, கை நிறைய சம்பளம், பகட்டான வாழ்க்கை இதுதான் பெரும்பாலான இளைஞர்கள் விரும்பும் வாழ்க்கை. இவை அனைத்திற்கும் வாய்ப்புகள் அமைந்தும், அதனை உதறி விட்டு, இந்த சமுகத்தின் நலனுக்காக தன்னலம் கருதாமல் அயராது உழைத்து கொண்டிருக்கும் ஓர் இளைஞர். இதற்காக இவருடைய பின்புலம் ஒன்றும் பணபலம் மிக்கது இல்லை. அன்றாட அடிப்படை தேவை மட்டுமே பூர்த்தி செய்யகூடிய விவசாய பெற்றோருக்கு பிறந்த மகனே ரா.ராஜமுருகன்.

இன்று இலட்சங்களில் இருந்தால் கோடிகளுக்கும், கோடிகளில் இருந்தால் மில்லியனுக்கும் ஆசைபடும் பலர் போல் அல்லாது, இவர் இச்சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஓர் விடிவெள்ளி ஆவார். திருச்செங்கோட்டில் பள்ளிபடிப்பை முடித்து, இளங்கலை பட்டத்தை (B.Sc - Catering Science and Hotel Management, RVS College of Arts and Science) பாரதியார் பலகலைக்கழகம், கோவையில் முடித்து, முதுகலை பட்டத்தை(MBA, M.Kumarasamy College of Engineering) அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே பல்வேறு கருத்தரங்குகளில் பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை உணவுகளை பற்றி ஆய்வு கட்டுரைகளை சமர்பித்து உள்ளார். கல்லூரி முடித்த பின் தனக்கு வந்த பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை உணவு மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 'நல்ல சோறு' என்ற அமைப்பை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு சமூக பணிகள் செய்து ஊடகங்கள், கருத்தரங்கு, உணவுதிருவிழா, பயிலரங்கு மற்றும் தொடர்பியல் சாதனைகள் வழியாக பல தரப்பட்ட மக்களுக்கும், மக்கள் நலம், மண் வளம் மற்றும் விவசாய நலன் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

தொடர்புக்கு :

09842672439

nallasoaru@gmail.com


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1