நம்ம ஊரு சமையல் - காரசாரமான நண்டு வறுவல் செய்யலாம் வாங்க....

 Saturday, September 7, 2019  07:30 PM

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 50 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு

செய்முறை :

* நண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

* அடுத்து அதில் நண்டு சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும்.

* பிறகு அதில் கால் டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். இடையிடையே பிரட்டி விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி, நண்டு வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும். நண்டு விரைவில் வெந்து விடும்.

* நண்டு வறுவல் ரெடி.

* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.

குறிப்பு

* நண்டு கிரேவியாக வேண்டுமானால் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு வறுவலை வெங்காயம், தக்காளி, பூண்டு இவை சேர்க்காமலும் சுவையாகச் செய்யலாம். அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து நண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1