கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு

 Sunday, August 25, 2019  08:14 PM

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



தென்மேற்கு பருவ காற்றின் சாதக போக்கின் காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைவாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 செ.மீ., வால்பாறை , நீலகிரி மாவட்டம் தேவாலா, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியுள்ளது






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1