கோவையில் ஸ்டாஃர்மிங் ஆபரேஷன்; அதிரடியாக களம் இறங்கியுள்ள கமாண்டோ படையினர்

 Sunday, August 25, 2019  02:32 PM

கோவையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஸ்டாஃர்மிங் ஆபரேஷன்-காக கமாண்டோ படையினர் களம் இறங்கியுள்ளனர்.

அது என்ன ஸ்டாஃர்மிங் ஆபரேஷன்?ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் - என்றால் ஒரே சமயத்தில் போலீசாரும், கமாண்டோ படையினரும் களத்தில் இறங்கி நகரில் தெரு தெருவாக மொத்தமாக சல்லடை போட்டு தேடுவார்கள். இதற்காக சிறப்பு போலீஸ் படையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் சரியான திட்டமிடுதலுக்கு பின்பே நடத்தப்படும். ஆபரேஷன் நடக்கும் போது அரசு அவர்களுக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கப்படும்.

சந்தேகப்படும் யாரையும் போலீசார் கைது செய்து விசாரிக்க முடியும். கோவையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கைக்கு எதிராகத்தான் தற்போது ஸ்டாஃர்மிங் ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆபரேஷனில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களும் நம்பகம் இல்லாத தேவையில்லாத தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2