நம்ம ஊரு சமையல் : தேங்காய் தோசை செய்வோம் வாங்க....

 Tuesday, August 13, 2019  07:30 PM

என்னென்ன தேவை?

இட்லி அரிசி 4 கப்,
பெரிய தேங்காய் 1/2 (அல்லது) சிறிய தேங்காய் 1 (துருவியது),
உப்பு சுவைக்கேற்ப,


எண்ணெய் சிறிது.

எப்படிச் செய்வது?

அரிசியைக் களைந்து 3 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, துருவிய தேங்காயுடன் நைசாக அரைத்துக் கொள்ளவும். (மாவைப் புளிக்க வைக்க வேண்டாம்). மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து, நீர்க்கக் கரைக்கவும். மாவு, மோர் அல்லது தண்ணீர் போல நீர்க்க இருக்க வேண்டும். தோசைக்கல்லை சூடு பண்ணவும். கல் நன்றாக சூடானவுடன், மாவை நன்கு கலக்கிக் கொண்டு ஒரு கரண்டியில் மாவை எடுத்து தோசைக் கல்லில் ரவா தோசைக்கு ஊற்றுவது போல் மெல்லியதாக சுழற்றி ஊற்றவும்.

இடைவெளிகளை மீண்டும் சிறிது மாவை எடுத்துக் கொண்டு நிரப்பவும். கரண்டியால் தேய்க்க வேண்டாம். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டுத் திருப்பிப் போடவும். திருப்பிப் போடாமல் மூடி வைத்தும் செய்யலாம். மெல்லியதாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும். ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் மாவை நன்கு கலக்கிக் கொண்டு ஊற்றவும். வெண்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும் இந்தத் தோசையை, தோசை மிளகாய்ப்பொடியுடன் சுடச்சுடப் பரிமாறவும்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Noyyal_media_Right1
Noyyalmedia_right2