கோவையின் கலைப்படைப்புகளின் அரங்கம் - கஸ்தூரி சீனிவாசன் கலை மையம்

 Tuesday, August 13, 2019  02:30 PM

கோவை அவிநாசி சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அருகே உள்ள ஆர்ட் கேலரி & ஜவுளிக் காட்சியகம் கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் கலை மையம்.

வேலை நாட்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை கலை மையத்தைப் பார்க்கலாம். கட்டணம் இல்லை. ஞாயிறு மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாட்களில் இல்லை.

மொஹஞ்சதாரோ காலத்திலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை ஆடை, அணிகலன்களின், பல்வேரு நூற்பு முறை, நூற்பு இயந்திரத்தின் ஒட்டுமொத்த அணிவகுப்பாக உள்ளது.


Arunhitech_curom1
ஐரோப்பிய ஓவியங்கள், கலைப்படைப்புகளின் பிரதிகள் தனி அறைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சியின் 'பாறைகளில் கன்னிகை' ஓவியமும், பிகாசோவின் 'ஓல்காவின் படமும்' எளிதில் காணக் கிடைக்காத கலை அம்சங்கள்.

ஐரோப்பிய ஓவியக் கலைஞர்களின் பார்வையில் இந்தியா எப்படியிருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஓவியங்கள் நிறைந்த அறைக்குள் நுழைகிறோம். 18, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓவியங்களில் சென்னை மெரினா கடற்கரையின் அப்போதைய தோற்றம், சென்னை நகரின் பண்டைய தோற்றம், தாஜ்மஹாலின் பேரழகு, கல்கத்தாவின் பரபரப்பு வாழ்க்கை என்று இந்தியக் கலையழகைத் தூரிகைகளால் மிளிரவைத்துள்ளனர்.

ஓவியக் கலையில் திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களுக்கு கண்காட்சி வைக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றனர்.

பிரபல ஜவுளித் துறை விஞ்ஞானியும், பத்மபூஷன் விருது பெற்றவருமான காலஞ்சென்ற கஸ்தூரி சீனிவாசனால் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டது, இந்தக் கலை மையம். கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கஸ்தூரி சீனிவாசன், ஜவுளித் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். இவரது மனைவி பார்பரா, மிகச் சிறந்த ஓவியர். தம்பதிகள் இருவரும் உலகம் முழுவதிலும் தாங்கள் கண்டு ரசித்த கலைகளை அனைவரும் கண்டு ரசிக்க விரும்பி இந்தக் கலை மையத்தை கோவையில் ஏற்படுத்தியது போற்றப்படவேண்டிய ஒன்று.


ArunhitPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Arunhitech_sqr2
Arunhitechsqr5
Arunsqr4
AdSolar1
arunhitech_sqr1