உடலில் நீர்ச்சத்து வற்றாமல் தடுக்கும் தேங்காய் பால்

 Tuesday, August 13, 2019  12:49 PM

கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கக் கூடியது.

பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது, லைட்டாக இருக்கும். தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள். தேங்காய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் உள்ளது. இது தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது. குழந்தை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் ஸ்மூத்தி செய்யும் போது பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியுடன் சியா விதைகள் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம். உடல் எடை குறைப்புக்கான சரியான பானமாக இருக்கும்.

1. வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

2. உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

3. எளிதில் செரிக்கக் கூடியது. லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களும் இதை அருந்தலாம்.4. தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. பொட்டாசியம் மிகவும் அதிகம்.

5. தேங்காய் பாலில் இருக்கு இரும்புச் சத்து இரத்த சோகை நீங்க உதவுகிறது.

6. தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியை வெகுநேரம் தாங்கக்கூடியது. உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

7. தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

8. உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.

9. தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து தலை முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Website Square Vanavil2
Noyyalmedia_right2