இன்றைய தினம் - ஆகஸ்ட் 12

 Monday, August 12, 2019  06:57 AM

உலக யானைகள் தினம்

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்

உலக இளைஞர்கள் தினம்

உலக இளைஞர்கள் தினம் (International Youth Day) ஆகஸ்ட் 12-ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்

1765 – இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1952 – மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.

1960 – எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.

1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.

1985 – சப்பானில் விமானம் ஒன்று ஒசுத்தாக்கா மலையில் மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.

2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

1892 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர், நூலகவியலாளர் (இ. 1972) பிறந்த தினம்

1892 – க. அ. நீலகண்ட சாத்திரி, இந்திய வரலாற்றாளர் (இ. 1975) பிறந்த தினம்

1927 – ஏ. திருநாவுக்கரசு, தமிழக எழுத்தாளர் பிறந்த தினம்Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Website Square Vanavil2
Noyyalmedia_right2