சிறுவாணி அணை 16 அடியாக உயர்ந்தது

 Sunday, July 21, 2019  07:05 AM

கோவைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி அணைநீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி,72மி.மீ., அடிவாரத்தில்,11மி.மீ., மழை பதிவானது. நீர் மட்டம், 16.40அடியாக உயர்ந்திருக்கிறது.



6.9கோடி லிட்டராக நீர் வரத்து இருந்தது.அணை பகுதியில் நேற்றும், மழைப்பொழிவு காணப்பட்டது. நீர்புகு கிணற்றில் இருந்து, புவியீர்ப்பு விசை மூலமாக அடிவாரத்துக்கு தானாக தண்ணீர் ஓடி வருகிறது.மூன்றாவது வால்வு தண்ணீருக்குள் மூழ்கியிருப்பதால், அதிகப்படியான அளவு அடிவாரத்துக்கு வருகிறது.

கடந்தாண்டை போல், குடிநீர் எடுப்பதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் குடிநீர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அணையில் இருந்து எடுப்பது தொடர்பாக, ஆலோசனை நடந்து வருகிறது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2