இன்றைய தினம் : ஜூலை 21

 Sunday, July 21, 2019  06:58 AM

2001 – காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருக்கும் செவாலியே, பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினம்

1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908) நினைவு தினம்

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

1983 – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.

1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.

1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.

1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.

1970 – 11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.

2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.

1984 – பரத், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826) நினைவு தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1