ஆங்கிலேயர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய கொங்கு குறுநில மன்னர்

 Saturday, July 20, 2019  05:30 PM

சுதந்திரப் போராட்டங்களில் ஈடு பட்ட இந்தியர்களை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் கொன்றிருக் கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் ஒருவர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாழ்ந்திருக்கிறார். அத்தகைய வீரத்துக்கும், பெருமைக்கும் உரிய தியாகியின் கல்வெட்டுகள் வீதியில் கிடப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை-திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தளி பேரூராட்சி.

இங்கு, கி.பி.1800-ல் தென் கொங்கு நாடு என்று அழைக்கப் பட்ட பழநி, விருப்பாச்சி, ஆயக்குடி, இடையகோட்டை, ஊத்துக்குழி, தளி ஆகிய 6 பகுதிகளில், பாளை யக்காரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளதாக, எத்தலப்பன் வரலாற்று நூல் கூறுகிறது.

தளி பாளையத்தை, அவர் களது வம்சாவழியில் 16 பேர் ஆண்டுள்ளனர். இதற்கான கல்வெட்டுகள், திருமூர்த்தி அணை பின்புறமுள்ள ஆலமரத்தடியில் கிடக்கிறது. இறுதியாக மலை யாண்டி எத்தலப்பர், அவரது தம்பி வெங்கிடுபதி எத்தலப்பர் ஆண்டுள்ளனர்.

கி.பி.1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலே யர்கள் தூக்கிலிட்ட செய்தி, எத்தலப்ப நாயக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரப் பேரரசு காலத்தில், மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக் கத்தில் அனைத்துப் பகுதிகளை யும் கொண்டுவரும் நோக்கில், பாளையங்களுக்கு தூதர்களை அனுப்பியுள்ளனர். அந்த வகை யில், தஞ்சாவூரில் இருந்து தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் அந்திரை கேதிஷ். ஆங்கிலேயருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவும், கட்ட பொம்மனை தூக்கிலிட்ட வெள்ளை யருக்கு பாடம் புகட்டவும், அவனை மட்டும் தனியே அழைத்து கைது செய்து துக்கிலிட்டுள்ளனர்.திணைக்குளம் கிராமத்தில் வெள்ளையனை தூக்கிலிடப்பட்ட அந்த இடம், தூக்கு மரத் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு பாளையக்காரர்களின் சுதந்திர கிளர்ச்சிக்கும், எழுச்சிக் கும் இந்த கல்வெட்டே ஆதார மாக உள்ளது. தற்போது அந்த இடம், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பாக உள்ளது. அங்கு புதைக்கப்பட்ட வெள்ளைய ருக்கு சமாதி எழுப்பப்பட்டு, அதன்மேல் கல் சிலுவையும் வைக்கப்பட்டுள்ளது.

சமாதியை மூடியுள்ள கல்வெட் டில், கி.பி.1801 துன்மிகி வருடம் சித்திரை மாதம் 13-ம் தேதி, பறங்கியர் அந்திரை கேதிஷ், தெய்வமாகி அடங்கின சமாதி என தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய் வாளர் பூங்குன்றன் கூறுகையில், ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில், தளி பாளையக்காரர் எத்தலப்பர் இருந்துள்ளார் என்பதற்கு ஆதார மாக, இந்தக் கல்வெட்டு உள்ளது. இதனை, அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.
நான்குபுறமும் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு வேலி, அந்த சமாதியை நூற்றாண்டுகளாக காத்து நிற்கிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, பலரும் பார்வையிட்டு செல்கின்றனர்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஒரே நாள் இரவில் தளி கோட்டை தரைமட்ட மாக்கப்பட்டது. போரில் எத்தலப்பர் கொல்லப்பட்டார்.

சொந்த மண்ணில் அந்நிய ருக்கு எதிரான போரில் எத்தலப் பர் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த அரண்மனையும் சூறையாடப் பட்டுவிட்டது. இத்தகைய வீரமும், தேச உணர்வும் கொண்ட ஒருவ ரின் வரலாறு, இன்றைய தலை முறையினர் பலருக்கும் தெரியாது.

தளி எதுலப்ப மன்னரின் வரலாற்று நிகழ்வுகளை அறியும் பொருட்டு தளி ஜல்லிபட்டி லிங்கமாவூர் வசித்துவரும் திரு .திருவேங்கடம் (70 வயது )அவர்களை சந்தித்து எத்தலப்ப மன்னரின் தகவல்களை கேட்டு அறிந்தோம் .

எத்தலப்ப மன்னர் ஆட்சி முறையில் ..நீர் பாசனம் துறையில் சிறந்த விளங்கிய போடிதாத்தா குளங்கள் அமைத்து தன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் ,அனைத்து சமுதாய மக்களுக்கு நீர்மேலாண்மை மூலம் சிறப்பாக ஆட்சி செய்தமுறையை எங்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

ஏர்மமா நாயக்கர் கால்நடை பராமரிப்பு துறையில் சிறந்த விளங்கியதற்கான கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார் ..மேய்த்தல் தொழில் ஈடுபட்ட ஏர்மா நாயக்கர் ,மாடுகளும் ,ஆடுகளும் ,மேயும் பொழுது ஆபத்தான விலங்குகள் கூட தொந்தரவு இல்லாமல் நகர்ந்து செல்லுமாம் ..எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை மலைமேல் உள்ள இடங்களில் பட்டிகள் அமைத்து பராமரித்து வந்திருக்கிறாரக்ள் ..இதற்கு மலைமேல் உள்ள முதுவர்கள் எர்ரமா நாயக்கருக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார்கள்

உடுமலை வரலாற்று ஆய்வுக் குழுவின் சிவகுமார் மூலம் திருவேங்கடம் அவர்களிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார்ஆகியோர் செய்திருந்தனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1