செய்யும் தொழிலில் கவுரவம் பார்க்கக்கூடாது - கப்பளாங்கரை சீமாறு தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி

 Thursday, July 18, 2019  08:30 PM  1 Comments

இக்கிராம மக்களின் முக்கிய தொழிலாக இருப்பது தென்னை சாகுபடி. தேங்காய் வியாபாரம், கொப்பரை உற்பத்தி தான். அடுத்ததாக, தென்னை ஓலையில் இருந்து சீமாறு தயாரிக்கப்படுவதோடு, இக்கிராமத்தின் பெயர் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசத்திலும் தெரியும் அளவுக்கு தொழில் வளர்ந்துள்ளது.

தென்னை சார்ந்த தொழில்களால் கிராம பொருளாதாரம் உயர்ந்தளவுக்கு, இத்தொழிலை நம்பி, 200க்கும் மேற்பட்ட டெம்போ வாகனங்களும் இக்கிராமத்தில் உள்ளன. அதேபோல, இக்கிராமத்துக்கு வடமாநில லாரிகளுடன், இப்பகுதி லாரிகளும் வெளிமாநில வாடகைக்கு சென்று வருகின்றன.'சீமாறு' தயாரிப்பு தொழிலானது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

இருந்தாலும், கடந்த, 32 ஆண்டுகளாக இக்கிராமத்தில் சீமாறு தயாரிப்பு வேகம் எடுத்து வருகிறது. இதற்காக, கப்பளாங்கரை மட்டுமன்றி, கிழக்கில் 60, கி.மீ., துாரமுள்ள தாராபுரம், மேற்கில் கேரளா எல்லை கிராமங்களில் இருந்தும் தென்னை ஓலைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சில இடங்களில், ஓலை நீக்கப்பட்ட சுத்தமான, சீமாறு குச்சிகளும் கிலோ கணக்கில் கொள்முதல் செய்யப்படுகின்றன. எடை அளவிலேயே விற்பனையும் செய்யப்படுகின்றன. அதாவது ஒரு கிலோ சீமாறு குச்சியில் இரண்டு சீமாறுகள் உருவாக்கப்படுகின்றன.

இதுபற்றி, சீமாறு உற்பத்தியாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது:

கடந்த 32 ஆண்டுகளாக சீமாறு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம் தொழிலில் கவுரவம் பார்க்கக்கூடாது. ஆள் இல்லாத நேரங்களில் தொழிலுக்கு தேவையான ஓலையை ஏதேனும் ஒரு வண்டியில் எடுத்து வர வேண்டும். காய்ந்த ஓலைகள் மீதோ, சீமாறு குச்சிகள் மீதோ தண்ணீர் ஊற்றக்கூடாது. சீக்கீரமாக குச்சிகள் கருத்து, விற்பனையை பாதித்து பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும். ஓலையை வாங்கி, சீமாறு குச்சிகளை பிரித்தெடுத்து அனுப்பும் போது கிலோவுக்கு, 3.5 ரூபாய் கிடைக்கிறது. இதில், கூலியாக, 1.50 ரூபாய் சென்று விடுகிறது. மீதம், இரண்டு ரூபாய் மட்டுமே தொழில் நடத்த ஊதியமாக கிடைக்கிறது. பொள்ளாச்சி பகுதியில், பலர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், வடக்கு பகுதியில் கப்பளாங்கரையில் மட்டும் தான் சீமாறு தயாரிக்கப்படுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலத்துக்கு தான் இங்கிருந்து சீமாறு லோடுகள் செல்கின்றன. மாதத்துக்கு, 4 நான்கு லோடு செல்கிறது. மழைக்காலமான இப்போது,தென்னைக்கு தண்ணீர் இல்லாமல் மட்டைகள் தானாக விழுகிறது. இதனால், சீமாறு தயாரிப்பும் அதிகரித்துள்ளது. ஆனாலும், விற்பனை அதே அளவில் தான் உள்ளது என்றார். இருந்தாலும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்,' என்றார்.‘வீடு, தோப்புகளில் கிடைக்கும் தென்னங்கீற்றுகளில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட குச்சிகளைச் சேர்த்துக்கட்டி, துடைப்பமாக்கி வைப்பார்கள். அதை இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் சிறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.

சுமார் அரைக்கிலோ எடை நிற்கும் துடைப்பத்தை வாங்கி வந்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கும்போது அவர்கள் எடைபோட்டுத்தான் எடுக்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் எட்டு ரூபாய் கிடைக்கிறது. ஆக, ஒரு துடைப்பத்துக்கு லாபமே இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு நாளில் 200 துடைப்பங்களைக்கூட சேகரிக்கிறார்கள். அவர்களுடைய தினசரி வருமானம் 300 முதல் 400 ரூபாயாக இருக்கிறது. செலவுகள் எல்லாம் போக லாபமாக குறைந்தபட்சம் 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்’’ என்றார்.

இந்தத் தொழிலில் இன்னொரு தரப்பு, மொத்த வியாபாரிகள்...

இவர்கள் சேகரிக்கும் துடைப்பங்களைத் தரம் பிரித்து, ஐம்பது ஐம்பதாக பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து ஃபார்வேர்டிங் ஏஜென்ட்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒரு பண்டலின் விலை 300 முதல் 800 ரூபாய் வரையில் தரத்துக்கு ஏற்ப அமைகிறது. ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 3% கமிஷன் கொடுத்தாலும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இதில் துடைப்பங்களை அடுக்கி வைப்பதற்கு இடம், அதை தரம்வாரியாக பிரித்து சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் என்கிற அளவில் சிறு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துடைப்பங்களுக்கான சீசன் உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் தவிர்த்த மற்ற மாதங்களிலும் நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய தொழில் இது.
அதோடு, சராசரியாக 100 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.

சுத்தமாக இருக்கப் பயன்படுத்தும் துடைப்பங்கள் நமக்குச் சோறு போடும் என்பது இந்தத் தொழிலுக்கு நிச்சயம் பொருந்தும்!Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


palanisamy commented on 6 month(s) ago
👌👌👌👌
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2