நீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ்து தினம்


Source: dinamani
 Tuesday, July 16, 2019  09:59 AM

உலக பிரசித்தி பெற்ற நீலகிரி மலை ரயிலின் 15வது பாரம்பரிய அந்தஸ்து தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

108 வளைவுகள், 250 பாலங்கள், 16 குகைகள் கொண்ட மலை ரயில் பாதையில் 150 ஆண்டு காலமாக இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

அழகிய மலைகள், அடர்ந்த வனங்கள், தேயிலைத் தோட்டங்கள், அருவிகள் நிறைந்த நீலகிரி மலை ரயில் பயணமானது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சுமார் 60 கி.மீ. தூரம் கொண்டது.இந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவி என்ஜினால் இயக்கப்படுகிறது. உதகைக்கு பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படுகிறது. ஆசியாவிலேயே 19 கி.மீ. தொலைவுக்கு பல் சக்கரப் பாதையில் மலை ரயில் செல்வது இங்குதான்.

மலை ரயிலில், 37384 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி என்ஜினாக நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்குகிறது. யுனெஸ்கோ அமைப்பால் நீலகிரி மலை ரயிலுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கிய தினம் ஜூலை 15ஆம் தேதி. இந்த நாளைக் கொண்டாடும் விதமாக குன்னூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மலை ரயில் இயக்கம் குறித்து குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவிகளும், கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியரும் கண்டு வியந்தனர். கடந்த 1914இல் சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு, 1918 இல் நீலகிரி கொண்டுவரப்பட்ட நீராவி என்ஜின் தற்போது பழுதடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதை மீண்டும் இயக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1