கோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை; 80 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல்

 Tuesday, July 16, 2019  09:37 AM

கோவையில் உள்ள காந்திபுரம் மற்றும் சரவணம்பட்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்த மாதம் ஆடி மாதம் என்பதால் அதிகமாக பத்திர பதிவு செய்ய மக்கள் முன்வரமாட்டார்கள்,. அதனால் இந்த மாதம் அதிக அளவில் பத்திர பதிவு நடக்கும்.. இதனால் அதிக அளவில் லஞ்சப்பணம் புழங்க வாய்ப்புள்ளது எனும் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.சோதனை முடியும் வரை சார் பதிவாளர் அலுவலக பணியாளர்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. அந்த சோதனையில் சார் பதிவாளர் அம்சவேணியின் மேஜையில் இருந்த கணக்கில் கொண்டு வராத 80 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Pic : File image


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2