கல்லூரி மாணவியை, தாயார் கண்முன் பெல்டால் தாக்கி துன்புறுத்திய கும்பல்: கோவையில் பரபரப்பு


Source: tamilmurasu
 Thursday, July 11, 2019  03:15 PM

கோவையில் ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவியை, அவரது தாயிடம் இழுத்து சென்று பெல்டால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.

கோவை குனியமுத்தூர் அண்ணா காலனியை சேர்ந்த 20 வயது மதிக்கதக்க கல்லூரி மாணவி ஒருவர், சம்பவத்தன்று தன்னுடைய ஆண் நண்பர்கள் 2 பேருடன் பைக்கில் சென்றுள்ளார். அவர்களை ஆத்துப்பாலம் மரக்கடை அருகே வழிமறித்த கும்பல், தகராறில் ஈடுபட்டதுடன், கல்லூரி மாணவியை பைக்கில் இருந்து இறக்கி, அவருடைய வீட்டுக்கு செல்லுமாறு மிரட்டியுள்ளனர்.

Real_Ad8

அப்போது பைக்கில் வந்த மாணவியின் ஆண் நண்பர்களுக்கும், கும்பலை சேர்ந்தவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், ஆண் நண்பர்களை, மாணவியின் வீட்டுக்கு அழைத்து சென்று, மாணவியின் தாய் முன்னிலையில் நீ இவனை காதலிக்கிறாயா? என்று கேட்டு மாணவியை அடித்து உதைத்துள்ளனர். மாணவியுடன் வந்த 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும், பெல்ட்டால் அடித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கல்லூரி மாணவி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரும்புகடையை சேர்ந்த சபியுல்லா (44), குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்த முகமது இப்ராஹிம் (44) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Real_Ad7

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right2
Real_Right3
Real_Ad1
Real_Ad9
Website Square Vanavil2