கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?

 Wednesday, July 10, 2019  12:30 PM

‘‘பப்பாளி நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சத்துமிக்கப் பழம். கிராமங்களில் எந்த விலையும் கொடுக்காமல் பப்பாளி மரத்தில் இருந்து பறித்து சாப்பிடும் வாய்ப்பு

அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது அவர்களுக்கான வரம். இதில் உள்ள ஏ.பி. வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட் போன்ற ரிச்சான சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. இயல்பிலேயே இந்தப் பழம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஜீரண பிரச்னைகள் மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி பழம் சாப்பிடுவது கைகொடுக்கும். பப்பாளிக் காயில் உள்ள பெப்சின் லாக்டெக்ஸ் போன்ற பொருட்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்பதை வெளிநாட்டில் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

Real_Ad5

அதுவும் கூட விலங்குகளிடம் செய்யப்பட்ட பரிசோதனையின் அடிப்படையிலேயே சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் மத்தியில் பப்பாளியை காயாக சாப்பிடலாமா என்பது குறித்து இன்னமும் ஆய்வு செய்யப்படவில்லை. நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்னையும் வருவதில்லை. கிராமப்புறங்களில் வறுமையான நிலையில் கருவுறும் பல பெண்கள் போதிய சத்துணவு எடுத்துக் கொள்ள வாய்ப்பின்றி உள்ளனர். இவர்களுக்கு பப்பாளிப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம். நம் ஊரில் இந்தப் பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது அறிவுப்பூர்வமானது அல்ல.

ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு காய் அல்லது பழம் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கலாம். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் பப்பாளியைக் காயாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பால் ஒவ்வாமையாக மாற வாய்ப்புள்ளது. ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. எளிதாக கிடைக்கும் சத்து மிக்க பப்பாளிப்பழத்தை தவறான நம்பிக்கைகளுக்காக தவிர்க்க வேண்டாமே,’’ என்கிறார் டாக்டர் கல்பனா.


Real_Ad7

Real_Ads6


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Real_Ad1
Real_Right2
Real_Ad9
Real_Right3