மர வீடுகள், படகு சவாரி... பரம்பிக்குளம் - மிஸ் செய்யக்கூடாத சுற்றுலா தளம்!

 Tuesday, July 9, 2019  02:30 PM  1 Comments

இயற்கை எழிலும் மிரட்டல் த்ரில்லும் கலந்த சுற்றுலா உங்கள் சாய்ஸா..? பரம்பிக்குளம் உங்களை வரவேற்கிறது. பொள்ளாச்சியில் இருந்து 39 கி.மீ தொலைவில், கேரள எல்லையில் பரவிப் படர்ந்து இருக்கிறது இந்த அழகிய பசுமைப் பிரதேசம். ஆணைப்பாடி என்ற இடத்தில் அமைந்து இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்துக்கு, பேருந்து வசதி உண்டு. காடு முழுமைக்கும் ஏசி போட்டது போல, ஆண்டு முழுவதும் குளுகுளு சூழல். மது, சிகரெட், பிளாஸ்டிக் பை என சுற்றுச்சுழலைப் பாதிக்கும் பொருட்களுக்கு இங்கு தடா!

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் :

கேரளம் மாநிலத்தில் சிற்றூர் தாலுகாவிற்கு உட்பட்ட 391 சதுர கிலோ மீற்றர்களுடன் 391 square kilometres (151.0 sq mi) பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு இடம் ஆகும். 1973 ஆம் ஆண்டு 285 சதுர கிலோ மீற்றர்களுடன் 285 square kilometres (110 sq mi) இப்பகுதி துவங்கப்பட்டது. இது ஆனை மலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் (Nelliampathi) இடையில் ஆய பாதை (Toll road) அமைந்துள்ள இடத்தில் உள்ளது.

பார்வையாளர்களுக்கான தகவல்கள் :

புலிகளின் பாதுகாப்புப் பகுதிக்கு இடைப்பட்ட இப்பகுதி சூழலியல் சுற்றுலா (Ecotourism) துறைக்கான சிறந்த இடமாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த படிப்புக்காக (nature education) வாய்ப்புகள் ஏறாலமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக இவை விளங்குகிறது. இங்கு பல நாட்டிலிருந்து மலைஏற்ற (Backpacking (wilderness)) வீரர்கள் வந்து அவர்களுக்கு கிடைத்த புதிய புதிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து செல்கிறார்கள். இங்கு மூங்கிலால் செய்த படகில் சவாரி செய்து புதிய அனுபவத்தைப்பெறலாம். இப்பகுதியில் இருக்கும் படகுதுறையிலிருந்து கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுவதால் இன்கு மோட்டார் படகு விடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் உள்ளூர் வாசிகள் மட்டும் மீன்பிடிப்பதற்கு நாட்டு படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இங்கு தேக்கு மரங்கள் ஆசியாவிலேயே அதிக அளவு காணப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தீவுப்பகுதியில் பெரிய மரங்களின்மேல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விவரங்கள் இவர்களின் அலுவலக இணைய தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதைத்தவிர்த்து வேறு தனி ஆட்களிடம் பதிவு செய்து ஏமாறவேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறார்கள். இங்கு வருபவர்கள் சுற்றிப்பர்க்க ஏதுவாக சபாரி வாகனங்களைக் காடுகள் துறை வழங்குகிறது. தனியாரின் இரண்டு சக்கரவாகனம் தவிர்த்து நான்கு சக்கர வாகனம் அனுமதிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டின் பொள்ளாச்சி நகரிலிருந்து இப்பகுதிக்கு கேரளா போக்குவரத்துக்கழகம் வாகனங்களை இயக்குகிறது. பொள்ளாச்சிக்கும் பரப்பிகுளத்திற்கும் இடைப்பட்ட தூரம் 65 கிலோ மீற்றர்கள் மட்டுமே. இதன் அருகில் இருக்கும் தொடருந்து நிலையம் பொள்ளாச்சி, மற்றும் 40 கிலோ மீற்றர்களுக்குள் வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் அமைந்துள்ளது.

உயிரினங்கள் :

பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து, சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன. மேலும் ஊர்வன, கருநாகம், கேரளா வாலாட்டி பாம்புகள், திருவாங்கூர் குக்குரி பாம்பு, திருவாங்கூர் ஓநாய் பாம்பு, கொச்சி பிரம்பு ஆமை, கல் ஆமை, இந்திய கரட்டைப் பல்லி, மேற்குத் தொடர்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் என 61 வகைகளும், மீன்கள் 47 வகைகளும், பூச்சிகள் 1049 வகைகளும், மற்றும் பட்டாம்பூச்சிகள் 124 வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமை வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அகணிய உயிரியான தவளை போன்ற நீர்நில வாழ்வன 23 வகைகள் காணப்படுகின்றன.

தாவரங்கள் :

இங்கு பல வகையான மரங்கள் காணப்படுகிறது. இவற்றுள் இங்கு காணப்படும் கண்ணிமரா தேக்கு மரம் (Kannimara Teak) 450 ஆண்டுகள் வயதுடையது ஆகும். இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்காக சூழல் விருதான மகாரிச்கா புரஸ்கார் விருதை இந்திய அரசு வழங்கியுள்ளது.

ஆணைப்பாடியில் இருந்து பரம்பிக்குளம் 25 கி.மீ தூரம். அடர்ந்த வனத்துக்கு நடுவே இருக்கும் சாலையில் பயணிக்கும்போது, இரண்டு பக்கங்களிலும் சுதந்திரமாக உலவும் மான் கூட்டம் நம் கவனம் கவர்கின்றன. காட்டு எருமைகளையும் காண முடிகிறது. தொலைவில் இரை தேடும் செந்நாய் கூட்டம் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ச்சுகிறது. அடிக்கடி கரை கடக்கிறது யானைக் கூட்டம். அவற்றுள் குட்டிகள் மட்டும் காரைத் தடவி, பின்புறத்தை கார் மீது தேய்த்து சேட்டை செய்கின்றன. நாம் அமைதியாக ரசிக்கும்பட்சத்தில், ஆபத்து இல்லை. இந்த வனத்தில் இருக்கும் சுமார் 20 புலிகளில் ஏதேனும் ஒன்று, அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் கண் களுக்குச் சிக்கும். அதே புலிக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அதன் டைனிங் டேபிளில் நீங்கள் இருப்பீர்கள்... உஷார்!

பரம்பிக்குளத்தில் மூன்று அணைகளும் கடல்போல் காட்சி அளிக்கும் பிரமாண்ட ஏரியும் உண்டு. கரையோர விலங்குகளை ரசித்துக்கொண்டே படகுச் சவாரியில் லயிக்கலாம். ஏரியின் நடுவே ஆங்காங்கே சில தீவு கள்... குன்றுகள். ஒரு தீவில் இருக்கும் குன்றின் உச்சியில் ஒரு பிர மாண்ட பங்களா இருக்கிறது.

அப்படியே சந்திரமுகி’ திகில் பங்களாபோலவே மிரட்டுகிறது. துணிச்சல் பேர்வழிகள்கூட அங்கு தனியாகத் தங்க யோசிப்பார்கள். கரையில் இருந்து இந்த தீவுக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. அந்த பங்களாவில் ஐந்து பேர் தங்க 5,000 வாடகை. மதியம் 3 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை தங்கலாம். மின்சாரம், குடிநீர், உணவு எதுவும் கிடையாது. கையோடு எடுத்துச் செல்லும் உபகரணங்களே துணை.


Real_Custom1
சில கி.மீ. உள்ளே சென்றால், கன்னிமாரா தேக்கு மரம் இருக்கிறது. காட்டுக்குள் ஆங்காங்கே மரத்தின் உச்சியில் வீடு கட்டிவைத்து இருக்கிறார்கள். தேனிலவுத் தம்பதியர் ஸ்பெஷல். ஆனால், எவரும் தங்கலாம். ஐந்து பேர் தங்குவதற்கு வாடகை 5,000. பௌர்ணமி இரவு மட்டுமே அனுமதி. வழிகாட்டி, பாதுகாவலர் உண்டு.

பரம்பிக்குளத்தில் இருந்து காட்டுக்குள் எட்டு கி.மீ. பயணித் தால், தெல்லிக்கால் பங்களாவை அடையலாம். இங்கும் மதியம் 3 மணியில் இருந்து மறுநாள் காலை 8 மணி வரை தங்கலாம். ஐந்து பேர் தங்கக் கட்டணம் 4,000. ஓர் உயர்ந்த கோபுரத்தில் அமைந்து இருக்கும் வாட்ச் டவரில், ஒரு சின்னக் கட்டடம் உண்டு. அதில், மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை தங்குவதற்கு, 3,500 கட்டணம். வன விலங்குகள் மிக அதிகம் இருக்கும் பகுதி என்பதால், ஏராளமான வன விலங்குகளை இங்கு இருந்து பார்த்து, ரசிக்க முடியும்!

தேசியப் பூங்காவுக்கும் வனச் சரணாலயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தேசியப் பூங்காக்கள் மனித நடவடிக்கைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி. உதாரணத்துக்கு சைலன்ட் வேலியைச் சொல்லலாம். தேசியப் பூங்காக்கள் ஒருபோதும் வனச் சரணாலயமாகக் கருத முடியாது. மத்திய அரசு நினைத்தால், முதுமலை போன்ற வனச் சரணாலயங்கள் தேசியப் பூங்காக்களாக உயர்த்தப்பட்டு, மனித நடவடிக்கைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்படலாம்.

பரம்பிக்குளம் மரவீடு

தமிழக எல்லையையொட்டி கேரளத்தில் இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் தேசியப்பூங்கா போன்றதுதான். காணக் கிடைக்காத வனவிலங்குகள், அரியவகை சிங்கவால் குரங்குகள், பறவையினங்கள், தாவரங்கள் நிறைந்த வனப்பகுதி. அதனால், பரம்பிக்குளம் வனம் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கடுமையானக் கட்டுப்பாட்டுக்கும் சோதனைக்கும் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளத்திலிருந்து பரம்பிக்குளத்துக்குத் தரை மார்க்கமாகச் செல்வதாக இருந்தாலும் தமிழகத்துக்குள் வந்து பொள்ளாச்சியிலிருந்துதான் செல்ல முடியும்.

பரம்பிகுளம் அணை

பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் முதலில் டாப் ஸ்லிப் வரும். தமிழகத்தின் மிக முக்கியமான வனச் சரணாலயம் இது. கும்கி யானைகளின் புகலிடம். தமிழில் வெளிவந்துள்ள பல சினிமாக்களில் டாப் ஸ்லிப் இடம்பெற்றிருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து டாப் ஸ்லிப்புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், டாப் ஸ்லிப்புடன் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிடும். அதற்குப் பிறகு பேருந்துகளுக்கு அனுமதியில்லை. டாப் ஸ்லிப்பில் தமிழக வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

மூங்கில் படகு சவாரி

டாப் ஸ்லிப்பைப் பொறுத்தவரை, ஒரேயோர் உணவுவிடுதிதான் இருக்கிறது. எனவே, உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று, விடுதிகளில் சமைத்துக்கொள்வது நல்லது. அங்கே சமைத்துக் கொடுக்க ஆள்கள் இருக்கிறார்கள். டாப் ஸ்லிப்பில் வரகளியாறு, கோழிக்கமுத்தி ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. இரவு மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகளை யானைகள் மீது அமர்த்தி வனத்துக்குள் அழைத்துச் செல்வர். அடர்ந்த வனத்துக்குள் யானை சவாரி த்ரில் நிறைந்த அனுபவம். யானைகளை நாம் முன்னரே புக் செய்துகொள்ள வேண்டும். யானை மீது நான்கு பேர் அமர்ந்து செல்லலாம். டாப் ஸ்லிப், பரம்பிக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ட்ரெக்கிங் செல்லவும் ஏற்பாடு செய்கிறார்கள். ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள், தேவையானப் பொருள்களை மறந்துவிட வேண்டாம்.

பரம்பிகுளத்தின் அழகிய தீவு

டாப் ஸ்லிப்பிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் கேரள எல்லைக்குள் அமைந்துள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதி. கேரள எல்லையில் பயணிகளின் பைகளைச் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிகரெட் குடிக்கவும் அனுமதியில்லை. பரம்பிக்குளத்தில் கூடார வீடுகளில் தங்குவதும் சற்று வித்தியாசமானது.

பரம்பிக்குளம் கூடாரம்

பரம்பிக்குளம் அணையில், மூங்கில் படகு சவாரி இருக்கிறது. அணையில் முதலைகள் இருப்பதால், கவனம் தேவை. பரம்பிக்குளத்தின் முக்கிய அம்சம், மர வீடுகள். பரம்பிக்குளம் அணையையொட்டிய காட்டுப் பகுதியில் மரங்களின் மீது மர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மர வீடுகளில் தங்கினால், இரவில் யானைகள் பிளிரும் சத்தத்தைக் கேட்கலாம். மன அமைதி வேண்டுமானால், இரு நாள்கள் பரம்பிக்குளம் மர வீட்டில் தங்கினால் போதும்... சிட்டி ஸ்ட்ரெஸ் பறந்தேபோகும்!

கன்னிமரா தேக்கு மரம்

பரம்பிக்குளம் அணைக்குள் தீவு ஒன்றுள்ளது. இங்கு உள்ள பங்களாவில் மின்சார வசதி கிடையாது. பௌர்ணமி இரவில் நில ஒளியில் தீவின் கரையில் தீ மூட்டி, திகட்டாத நினைவலைகளை நாம் உருவாக்கலாம். கடல்களில் அலையடிப்பதுபோல தண்ணீர் தீவின் கரையைத் தொடுகிறது. இந்தத் தீவுக்கு மோட்டார் படகில் அழைத்துச் செல்கிறார்கள். உலகத்திலேயே உயரமான அகலமான தேக்குமரமான `கன்னிமாரா' பரம்பிக்குளத்தில்தான் உள்ளது. 10 பேர் இணைந்து கட்டிப்பிடித்தாலும் கட்டியணைக்க முடியாத மரம். சுமர் 400 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த மரத்தை, பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறது கேரள வனத்துறை!


Real_Ad7

Real_Ads6


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Gopal Koothapiran Gopal Koothapiran commented on 1 month(s) ago
welcome
Subscribe to our Youtube Channel


Real_Ad9
Website Square Vanavil2
Real_Right2
Real_Ad1
Real_Right3