கோவையிலிருந்து நெல்லியம்பதி-க்கு டூர் போறிங்களா.. அப்போ இந்த இடங்களையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க...

 Monday, July 8, 2019  06:30 PM

காடுகளை சுற்றி பார்க்க தரமான செம்மையான இடம்,கோவையில இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதியில் பல வியூவ் பாய்ண்டுகளும்,அருவிகளும்,அடர்ந்த வனபகுதிகளும்,தேயிலை,காப்பி,ஆரஞ்சு தோட்டங்களும் உள்ளது...

கோவையில் இருந்து கா.சாவடி வழியாக வேலந்தாவளம் (தமிழக- கேரள சோதனைசாவடி)வழியாக சித்தூர்,புதுநகரம் வழியாக கொல்லங்கோட்டில் இருந்து நென்மாரா இந்த நென்மாராவில் இருந்து நெல்லியம்பதிக்கு மலைவழி சாலை வழியாக பயணிக்க வேண்டும்.. முக்கிய தேவையான பொருட்களை நென்மாரவில் வாங்கிகொள்ளலாம்,நெல்லியம்பதி மலை சாலையில் கடைகள் இல்லை எனவே நென்மாராவில் வாங்கிகொள்வது நல்லது,நெல்லியம்பதியில் பெட்ரோல் பங்க்குள் இல்லை,அங்குள்ள சில கடைகளில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 விற்கப்படுகிறது..

நென்மாரா டவுனை தாண்டி நெல்லியம்பதி சாலையில் 3 கள்ளு கடைகள் உள்ளது..அந்த சாலையில் போகும்போது மலையேறுவதற்க்கு முன்பாக 'போத்துண்டி டேம்' உள்ளது நுழைவு கட்டணம் ரூ.10, அந்த டேம்மிற்கு கீழ் பூங்கா உள்ளது, மேலே டேமிற்க்கு சென்றால் அழகான நெல்லியம்பதி மலைகளும்,அருவிகளும் நன்றாக தெரியும்,அங்கே போட்டோ எடுப்பதற்க்கு நல்ல அருமையான இடம்,பின்னர் டேம் விட்டு வெளியே வந்தால் சில கடைகள் உள்ளது...

போத்துண்டி டேம்மிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் மலைபகுதி ஆரம்பமாகிறது.. அந்த இடத்தில் ஒரு பாரஸ்டு செக்போஸ்ட் உள்ளது,அங்கே உங்களது வண்டி எண்களை பதிவு செய்துவிட்டு மலையேற ஆரமிக்கலாம்.. சிறிது தூரத்தில் போத்துண்டி அணையின் மேல் பக்க வியூவ் தெரியும்,அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு சிறிய அருவி ரோட்டின் ஓரத்தில் ஓடிகொண்டு இருக்கும்.

உடனே அங்கே வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம்.நீங்கள் அந்த சாலையில் 45 க்கும் மேற்பட்ட சிறிய அருவிகள் மற்றும் 15 கொஞ்சம் பெரிய அருவிகளை காணலாம்..வேறு எங்கும் இதுபோன்று அருவிகள் நிறைந்த மலைசாலையை பார்க்க முடியாது,போகும் வழியில் நல்ல பனிமூட்டமாக இருக்கும்.. அருவிகள் நிறைந்த, பனிமூட்டமான சாலையில் பயணிப்பது நண்றாக இருக்கும்..

போகும் வழியெல்லாம் புகைப்படம் எடுப்பதற்க்கு அழகான அருவிகளும்,வியூவ் பாய்ண்டுகளும்,அடர்ந்த காடுகளும் உள்ளது..சாலையில் யானை சானங்களை பார்கலாம்..அதிர்ஷ்டம் இருந்தால் யானையை கூட பார்கலாம்...

அப்படியே பயணித்தால் 'கைகாட்டி' என்ற ஊர் வரும் கைகாட்டியில் இருந்து வலதுபுறமாக சாலை பிரியும்...வலதுபுறமாக சென்றால் நிறைய இடங்கள் உள்ளது... வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்றால் அங்கும் பல இடங்கள் உள்ளது.. இனி சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை பார்கலாம்..

1.சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்
2.காரசூரி வியூவ்பாய்ண்ட்
3.மான்பாரா பீக் (அல்லது)ராஜாஸ் கிளிப்

Vanavil New1
4.கேசவன்பாரா வீயூவ்பாய்ண்ட்
5.கீரின் லேண்ட் பார்ம் ஹவுஸ்
6.காரபார வாட்டர்பால்ஸ்
7.விக்டோரியா சர்ச் ஹில் வியீவ்பாய்ண்ட்
8.மிஸ்டி வேலி ரெசார்ட்(தங்குவதற்கு)
9.மட்டுமலா வியூவ்பாய்ண்டு(ட்ரெக்கிங்) ,ஆனாமடா எஸ்டேட்(ட்ரெக்கிங்) வரையாட்டுமலா(ட்ரெக்கிங்)

இனி ஒவ்வொரு இடத்தையும் விரிவாக பார்போம்..

1.சீதாரகுண்டு வியூவ்பாய்ண்டு(seetharagundu viewpoint):--

இந்த சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட் பகுதி போப்ஸ் எஸ்டேட்(POABS ESTATE)பகுதியில் உள்ளது ,இது தனியாருக்கு சொந்தமான இடம்..இப்பகுதி முழுவதும் காப்பி,தேயிலை,ஆரஞ்ச்,ஏலக்காய்,மிளகு தோட்டங்களும்,அடர்ந்த காடுகளும்,அருவிகளும் உள்ளது..இலங்கையில் இருந்து சீதாவை மீட்டு வந்த ராமன் அயோத்திக்கு செல்லும் வழியில் இப்பகுதில் சில நாட்கள் தங்கி இருந்ததால் இப்பகுதிக்கு 'சீதாரகுண்டு'என்று பெயர் வந்ததாம் ...போப்ஸ் எஸ்டேட்டில் பயணித்தால் சீதாரகுண்டு வியூவ்பாய்ண்ட்க்கு முன்னால் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு 100 மீட்டர் நடந்தால் வியூவ்பாய்ண்டை சென்றடையலாம்..பார்த்தவுடனே பதற வைக்கும் ,அபாயகரமான
வியூவ்பாய்ண்ட்...

அங்கிருந்து பொள்ளாச்சி பகுதிகளை காண்லாம்...இரண்டு அனைகட்டுகளும் பார்கலாம்...வியூவ்பாய்ண்ட் சுமார் அரை கிலோ மீமீட்டருக்கு நீண்டு இருக்கும்,,அப்படியே நடந்தால் 7 ஒரு பெரிய நீர்வீழ்ச்சி பார்கலாம்..புகைபடம் எடுப்பதற்க்கு சிறந்த பகுதி..வியூவ்பாய்ண்ட் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுப்பது திரில் என்றாலும் கீழே விழுந்தால் அவ்வளவுதான்...அப்பகுதில் உள்ள பெரிய புற்களை பறித்து நுகர்ந்து பார்தால் அது எலுமிச்சை வாசம் வரும்..

அந்த புற்களின் பெயர் லெமன் கிராஸ் (lemon GrasGrass) இதனை தைலமாக தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்கிறார்கள் ..அந்த பள்ளதாக்கில் மேகங்கள் மிதப்பதையும் காண்லாம்..பார்த்துவிட்டு வாகனங்கள் நிறுத்திய இடத்தில் ஒரு தேநீர் கடை உள்ளது இந்த கடை போப்ஸ் எஸ்டேட் நடத்தும் கடை ஆகும்..இங்கு அங்கு விளையும் தேயிலை, காப்பி தூள் ஆகியவை விற்பனை செய்யப்படும்... நடந்து வந்த களைப்பில் அங்கே தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து வேறு இடம் செல்லலாம்..







Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2