கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்தது; சுற்றுலா பயணிகளுக்கு அடுத்த வாரம் அனுமதி

 Friday, July 5, 2019  07:10 AM

கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மலை பெய்துவருகிறது, இதன் காரணமாக கோவையின் முக்கியமான சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அருவியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை..

இப்பொழுது அருவியில் தண்ணீர் வர துவங்கியுள்ளதால், அடுத்த வாரம் அனுமதி அழைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Real_Ad8
இது குறித்து வனச்சரக அதிகாரி ஒருவர் கூறும்போது..,

தற்போது மலை தீவிரம் அடைந்துள்ளதால், அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, பாதுகாப்பை கருதி சுற்றுலாபயணிகளுக்கு இன்னும் அனுமதி அளிக்க வில்லை. தண்ணீர் குறையும்பட்சத்தில் விரைவில் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார்.

இதனால் இன்னும் சிலநாட்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Real_Custom1

Real_Ad7


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right3
Real_Ad9
Website Square Vanavil2
Real_Ad1
Real_Right2