பாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண்ட சோயா பால்


Source: tamil.webdunia
 Thursday, July 4, 2019  12:11 PM

சோயா பாலை எந்த விதமான கெமிக்கல் இல்லாமல் இயற்கையான எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருந்து இந்த சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரிக்கலாம். பச்சை சோயா பீன்ஸில் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம்.

சோயா பாலில் சர்க்கரை, எசன்ஸ், சிறிது சமையலுக்கு பயன்படும் உப்பு சேர்த்து சுவையான பாதாம்பால் தயாரிக்கலாம்.

சோயா பீன்ஸிலிருந்து மூன்று விதமாக சோயாபால் எடுக்கலாம்.

1. சிவப்பு சோயா பால் விதையில் தோல் உரிக்காமல் அப்படியே பால் எடுக்கலாம். இனால் அதன் நிறம் இளம் ஊதா நிறத்தில் இருக்கும்.
2. சோயா விதையில் அதன் தோலை நீக்கி அதன் வெள்ளைநிற சோயா விதையிலிருந்து பால் எடுத்தோமானால் சோயா பால் வெள்ளையாக இருக்கும்.
3. மளிகை கடைகளில் விற்கும் சோயா பீன்ஸ் டிரை சோயா பீன்ஸ் ஆகும்.

Vanavil New1

* வாங்கி வந்த சோயா பருப்பை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து மறுபடியும் சோயா பருப்பை கழுவி சுத்தம் செய்து அதிலிருந்து சோயா பால் தயாரிக்கலாம். இதன் சுவையும், மணமும், நிறமும் சற்று மாறுதலாக இருக்கும். சோயா பால் தயாரிப்பதற்கு இயந்திரம் உள்ளது.

* மாட்டு பாலுக்கு மாற்றாக பயன்படுத்தி சோயா பாலிலிருந்து பத்து வகையான உணவு தயாரிக்கலாம். 1. பாதாம்பால். 2. பிஸ்தா மில்க். 3. ஏலக்காய் மில்க் 4. ரோஸ் மில்க். 5. ஸ்ட்ராபெரி மில்க். 8. ஜிகர்தண்டா மில்க். 9. சாக்லேட் மில்க். 10. காபி மில்க் ஆகியவை தயாரிக்கலாம்.

* இந்த சோயா பீன்ஸ் விதையிலிருந்து பால் எடுத்தபிறகு அதன் கழிவு சத்தான உணவு ஆகும். இதற்கு ஒகாரா என்று பெயர். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. இந்த ஒகாரா மாற்று உணவுப் பொருட்களுடன் பிஸ்கட், கோதுமை மாவு, மற்ற தானிய உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும். இந்த சோயாபால் தரமான மாட்டு பாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண்டது.

* இந்த சோயா பாலில் எனர்ஜி, புரோட்டின், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து சோடியம் உள்ளது. இதைப் போல் 30க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளன.

* இந்த சோயாபாலை தினமும் அருந்தினால் கொலஸ்டிரால் அளவு குறைந்துவிடும். இதயம் மற்றும் சிறுநீரகம் நல்ல ஆரோக்கியமாக செயல்படும். உடலில் கேன்சர் செல் வராமல் தடுக்கும். மூளையின் ஞாபகசக்தி அதிகரிக்கும். மெல்லிய தேகம் உள்ளவர்கள் சோயாபால் அருந்தினால் உடல் வலுப்பெறும். உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு குறைந்துவிடும். உடலில் சீக்கிரம் செரிமானமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலுக்கு ஏற்ற உணவாகும்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2