மன்மத லீலையை வென்றார் உண்டோ -- பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டூடியோ

 Wednesday, June 12, 2019  06:30 PM

கோவையில் விவரம் தெரிந்த அந்தக் காலத்து மனிதர்களைக் கேட்டால் மட்டும், அந்தப் பேருந்து நிறுத்தத்துக்கு நேர் தென்புறம் உள்ள காம்பவுண்டுக்குள் இருக்கும் அந்தப் பரந்த வெளிதான் சென்ட்ரல் ஸ்டுடியோ இருந்த இடம் என்பார்கள். இப்போது அதனுள்ளே நுழைந்தால் சுமார் அரை ஏக்கருக்கு இருபுறமும் பார்த்தினியம் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதைக் கடந்தால் உள்ளே சில பார்சல் அலுவலகங்கள், கம்பெனிகள், இரும்புக் குடோன்கள் வியாபித்திருக்கின்றன.

பட்சிராஜா ஸ்டுடியோஸ் அல்லது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் எனும் திரைப்பட படப்பிடிப்பு ஸ்டுடியோ என்பது கோயமுத்தூரில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவால் 1945ல் தொடங்கப்பட்டது. இந்த வளாகத்தில் தான் அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட கதாநாயகர்கள் கதாநாயகிகளுடன் டூயட் பாடினார்கள். ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ.!’ என வெற்றிலைச் சிவப்பு வாயால் பாடி பலரையும் கனவு காண வைத்தார்கள்.

சென்னைக்கு வெளியே சேலத்தில் 1935-ல் டி.ஆர்.சுந்தரம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டுடியோவை தொடங்கினார். இதுதான் அப்போது அனைத்து வசதிகளும் கொண்ட படப்பிடிப்பு நிலையமாக இருந்தது. இதைப் போலவே கோவையிலும் ஒரு ஸ்டுடியோவை உருவாக்க வேண்டும் என கோவை தொழிலதிபர்கள் முயற்சித்தார்கள். அப்படி உருவானதுதான் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. இதை உருவாக்கியதில் ரங்கசாமி நாயுடு, ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர் எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு ஆகியோருக்கு முக்கியப் பங்குண்டு.

திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு 1910-ல் பிறந்தார், 1976ல் இயற்க்கை எய்தினார். இவர் இயக்கத்தில், மு. கருணாநிதி வசனத்தில் பட்சிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம். ஜி. ஆர், பானுமதி நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் 1954-ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப்படம் வெளியான அந்த காலகட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும் பெற்றது. தமிழில் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் திரைப்படமும் இதுதான். பின்பு ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் இந்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரின் திரை வாழ்க்கையை சென்ட்ரல் ஸ்டுடியோவை ஒதுக்கிவிட்டு எழுத முடியாது. ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர்கள் பாபநாசம் சிவன், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கும் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோதான். சென்ட்ரல் ஸ்டுடியோவை உருவாக்கியவர்களில் ஒருவரான ஸ்ரீராமலு நாயுடு, 1946-ல் அதிலிருந்து விலகி, புலியகுளம் பகுதியில் பட்சிராஜா ஸ்டுடியோ என்ற புதிய திரைத்தளத்தை உருவாக்கினார். இந்நிறுவனமும் பல வெற்றிப்படங்களைத் தந்தது.

தற்போது ஸ்டுடியோவானது கோவை ராமநாதபுரம் பகுதியில் விக்னேஷுமஹால் எனும் திருமண மண்டபமாகவும் பிற பகுதிகள் மருத்துவ ஆய்வு கூடம் மற்றும் தொழில் சாலைகளாகவும் மாறிவிட்டன

திரைப்படங்களின் பட்டியல்

1941ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் ஆர்யமாலா,
1947ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் கன்னிகா,

Vanavil New1
1949ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் பவளக்கொடி
1950ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் காஞ்சனா தமிழ்
1950ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் காஞ்சனா மலையாளம்
1950ல் கே.ராம்நாத் இயக்கத்தில் ஏழை படும்பாடு
1950ல் கே.ராம்நாத் இயக்கத்தில் பீடல பாட்லு தெலுங்கு
1952ல் அமைய சக்கரவர்த்தி இயக்கத்தில் புரட்சி வீரன்
1952ல் அமைய சக்கரவர்த்தி இயக்கத்தில் தேசபக்தன் மலையாளம்
1952ல் ஏ.எஸ்.ஏ.சாமி மற்றும் சீனிவாச ராவ் இயக்கத்தில் பொன்னி
1952ல் ஏ.எஸ்.ஏ.சாமி மற்றும் சீனிவாச ராவ் இயக்கத்தில் பொன்னி தெலுங்கு
1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் மலைக்கள்ளன் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ் திரை படம்),
1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் அஃகி ராமுடு தெலுங்கு [6]
1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் பெட்டட கள்ளகன்னடம் [7]
1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் டஸ்கர வீரன்மலையாளம் [8]
1954ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் சுரேசேனசிங்களம் [9]
1955ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் ஆசாத் ஹிந்தி [10]
1959ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் மரகதம்,
1960ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் விமலா தெலுங்கு
1961ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் சபரிமலை ஐய்யப்பன் மலையாளம் படம் ( 3 வது சிறந்த படம் என குடியரசுத் தலைவர் சான்றிதழ்)
1963ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் கல்யாணியின் கணவன்,


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2