ஆழியாறு, சின்னார்பதி அருகே வரையாடுகளை தொந்தரவு செய்த நபர்களுக்கு அபராதம்

 Wednesday, June 12, 2019  06:04 PM

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர், வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால் வரையாடுகள் போன்றவை சாலையில் நடமாடிவருகின்றன. சுற்றுலாப்பயணிகள் கவனமாக செல்ல ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது,


Vanavil New1
இந்நிலையில் நேற்று வால்பாறைக்கு செல்லும் சாலையில் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்தனர். அவர்கள் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தது அங்கிருந்த ஓடையில் குளித்தபோது பிடிபட்டனர். அவர்களுக்கு ஏழு பேருக்கு வனத்துறையினர், 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

அதேபோல், 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே, புகைப்படம் எடுத்து வரையாடுகளை தொந்தரவு செய்த, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த முகமது அன்வர்சா, 35, அன்வர்சா, 28, ஆகியோரை பிடித்தனர். அவர்களுக்கு தலா, நான்காயிரம் என மொத்தம், எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மொத்தம், ஏழு பேருக்கு, 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2