கல்விக்காக சேமிக்க கற்றுக் கொள்வோம்

 Wednesday, June 12, 2019  05:49 PM

எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது.

குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்...

பெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி விழிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள்.

பெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் முதல் தலைமுறை கல்வியாளர் என்றால், பெற்றோருக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.

பெற்றோர் தேர்ந்தெடுக்கும் பள்ளியைப் பொறுத்து படிப்புச் செலவு அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால் முறையாக இந்தத் தொகை சேமிக்கப்படாவிட்டால் அது வீட்டு பட்ஜெட்டின் வேறு திட்டத்தில் முடக்கம் ஏற்பட காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோருக்கு விளக்குங்கள். அடிப்படைத் தேவையான சொந்த வீடு கனவு, மகிழ்ச்சிக்கான சுற்றுலா செலவு, உறவு பேணுதலுக்கான செலவுகளை, கல்விச் செலவுத் தொகை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது கடன் சுமையுடன், மனச்சுமையையும் அதிகரிக்கும்.


Real_Custom1
அதற்காக சிறுசிறு செலவுகளில் கவனமாக இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க பழகுங்கள். பெற்றோருக்கும் சொல்லிக் கொடுங்கள். மிச்சமாகும் சில்லறைத் தொகையைக்கூட உண்டியலில் போட்டுவைத்து, மாதம் ஒருமுறை சேமிப்பில் செலுத்திவிடலாம்.

பொருட்கள் வாங்கச் செல்லும்போது, ஒன்றுக்கு இரண்டாக வாங்குவது, எப்போதாவது தேவைப்படும் என்று இப்போதே வாங்கி வைத்தல் போன்ற அலட்சியமான பழக்கத்தை மாற்றுவது சேமிப்பை அதிகமாக்கும். அதே நேரம் வாங்கும் பொருட்களின் தரம் (உதாரணம் ஸ்கூல் பேக், காலணி, உடை), பணம் விரயமாவதை தடுக்கும். எனவே தரமான பொருளை வாங்கி மீண்டும் மீண்டும் ஒரே பொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்தி அவசியமான சேமிப்புத் தொகையை அதிகரிக்கலாம்.

சுவைக்காக வெளியில் சாப்பிட செலவிடும் தொகை, உணவைத் தாண்டிய உபரி செலவுகள், ஆடம்பர பொருட்களா பள்ளி கல்லூரிக்கு செல்ல பைக், கார் கேட்பது, விலை உயர்ந்த செல்போன் கேட்பது, அதற்காக பெற்றோரை கடன் வாங்க வைப்பது , பின்னர் வட்டிக்கு பெரும் தொகையை செலுத்துவது போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அது நீங்கள் சேமிக்கும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை கட்டுப்படுத்த நீங்்களும் பெற்றோருக்கு உதவலாம்.

மொத்தத்தில் செலவு திட்டமிட்டதாக இருந்தால், சேமிப்பு காலியாகாது. சேமிப்பே உங்கள் பெற்றோரின் கனவுகளுக்கும்,உங்களின் கல்விககும், எதிர்காலத்திற்கும் சிறந்தது.

சிறுகச் சேர்த்து பெருக வாழ் என்பது பெரியோர் வாக்கு. அது என்றும் பொய்ப்பதில்லை. சேமிப்பை நிரந்தர சேமிப்புகள், தற்காலிக சேமிப்புகள் என இருவகையாக பிரித்துக் கொள்ளுங்கள். எதிர்கால கல்விக்கான சேமிப்பை நிரந்தர சேமிப்பாக கருதுங்கள். அந்த தொகையை எந்த சூழ்நிலையிலும் எடுத்து செலவு செய்ய முடியாத வகையில் டெப்பாசிட் செய்ய வேண்டும். வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் எதிர்கால கல்விக்கான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள்.

“என் குழந்தைக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “என் பிள்ளை புத்திசாலி, நிறைய மதிப்பெண்கள் பெற்று முன்னுரிமை பெற்றுவிடுவதால் எனக்கு நிறைய செலவு வராது” அதனால் நான் சேமிக்கத் தேவையில்லை என்று நினைப்பதும், “நான் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் எனது குழந்தையை சேர்க்க மாட்டேன், எனவே எதிர்கால கல்வியைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்பது போன்ற எண்ணங்களை பெற்றோர் கொண்டிருக்கலாம். அவர்களிடம் எதிர்கால கல்விக்காகசேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவது புத்திசாலி மாணவர்களான உங்களின் பொறுப்பு. சேமிப்பில் உங்கள் கனவும் அடங்கியிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள!


Real_Ads6

Real_Ad5


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad1
Real_Right3
arunhitech_sqr1
Website Square Vanavil2
AdSolar1
Arunhitech_sqr2