தகவல் துளிகள் : கோவை இந்தியன் ஆயுர்வேதிக் ஹாஸ்பிடல்

 Wednesday, June 12, 2019  05:32 PM

இந்தியன் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு,கோவை மாவட்டம் ,கணபதி அருகே விநாயகபுரத்தில் ஜனவரி 5,2004 இல் துவங்கப்பட்டது.அனைத்து விதமான நோய்களுக்கும் பாரம்பரிய ஆயுர்வேத முறைப்படி தீர்வு காணும் நோக்கில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதம் என்பது மருந்துகள் மட்டுமில்லாது ஆரோக்கியமாக வாழும் வழிமுறை ஆகும்.உடலும் மனதும் இணக்கமாக இயங்கும் போது நோய்கள் தோன்றுவதில்லை.இந்த இணக்கமான நிலை ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

பல்வேறு வகையான மூலிகைகளை கொண்டு உருவாக்கப்படும் மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. பக்கவாதம் மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் முறையில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வளாகத்தினுள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமும், தன்வந்திரி கோயிலும் அமைந்துள்ளது.


Vanavil New1
சொந்தமாக தயாரிக்கப்பட்ட மருந்துகளை நோய்க்குத்தகுந்தபடி கலந்து தருகின்றனர். இங்குள்ள மருத்துவமனையில் சுத்தமான தேன் மற்றும் வாசனைப்பொருட்களும் கிடைக்கின்றன.

இதன் முகவரி :

இந்தியன் ஆயுர்வேதிக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
S F NO :85, ராஜவிக்னேஷ் நகர், விளாங்குறிச்சி ரோடு,
கணபதி, கோவை 641 006.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2