புது பைக் வங்கியிருக்கிங்களா? அப்போ இதையெல்லாம் நினைவில் வெச்சுக்கோங்க...

 Wednesday, June 12, 2019  03:35 PM

புதிய பைக் வாங்கி உள்ளவரா ? அல்லது வாங்க போறிங்களா ? யாராக இருந்தாலும் பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என இந்த புதிய பைக் பராமரிப்பு பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

1. புதிய பைக்கில் குறைந்தபட்சம் முதல் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்துடனும் அடுத்த 1000கிமீ மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை இயக்குங்கள்.

2. சரியான வேகம் சரியான கியர் ; குறைந்தபட்ச கியரில் அதிக வேகம் எடுப்பதோ அல்லது அதிகபட்ச கியரில் குறைவான வேகத்தில் அதிகம் நேரம் ஓட்டுவதோ இரண்டுமே வேண்டாம்.

3. திடீரென வேகம் எடுப்பதோ அல்லது அவசரகதியாக பிரேக் பிடிப்பதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

4. மழை காலத்தில் சேறு சகதி போன்றவை அதிகமாக என்ஜின் மீது படியும். நம்முடைய குறைந்தபட்டச சிசி என்ஜின்கள் அனைத்தும் காற்றினால் குளிர்விக்கப்படுவதனால் என்ஜின் மீது அதிகப்படியான தூசு மற்றும் என்ஜினை மறைக்கும் வகையில் பொருட்களை வைப்பது நல்லதல்ல.

5. முத்தான முதல் சர்வீஸ் ; மிக அவசியமான முதல் சர்வீசினை தயாரிப்பாளர் கொடுத்துள்ள கிமீ செய்துவிடுவது நல்லது.6. காலம் தவறுதல் ; தயாரிப்பாளர் பரிந்துரை கிமீ சர்வீஸ் செய்ய தவறினால் மைலேஜ் , என்ஜின் ஆயுள் போன்றவை குறையும்.

7. அங்கிகரிக்கப்பட்ட பைக் சர்வீஸ் சென்டரில் என்றுமே சர்வீஸ் செய்வது மிகவும் நல்லதாகும் . தற்பொழுது விற்பனைக்கு வருகின்ற புதிய பைக்குகள் அனைத்துமே நவீன அம்சத்தை கொண்டுள்ளதாகும்.

8. தொடருங்கள் புதிதாக பைக் வாங்கியபொழுது நாம் பராமரிக்கும் அனுபவத்தினை கடைசிவரை தொடர்ந்தால் பைக்கின் ஆயுளும் நல்லாயிருக்கும்.

9. ஒவ்வொரு பைக் ஓட்டிகளுக்கும் ஒவ்வொரு விதமான பழக்கங்களும் தனித்துவமான அனுபவங்களும் செயல்பாடும் இருக்கும். எனவே மைலேஜ் , என்ஜின் ஆயுள் போன்றவை இவற்றை கொண்டே அமையும்.

10. பைக்கினை பொறுத்தவரை ஒருவரின் பழக்கத்திலே தொடர்ந்து இயக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். இது பலருக்கு அனுபவத்தில் நன்றாகவே தெரியும். நம்முடைய பைக்கினை வேறு ஒருவர் ஓட்டிவிட்டு கொடுத்தால் நமக்கே தெரியும் வித்தியாசமாக இருப்பதனை உணர இயலும். எனவே முடிந்தவரை இரவல் தந்தால் உடனடியாக திரும்பெற்று கொள்ளுங்கள்.

11. உங்கள் பைக்கினை விரும்புங்கள்..ஒவ்வொரு இடத்திற்கு நீங்கள் செல்லும்பொழுதும் உங்கள் உற்ற தோழனாக உங்கள் உடனே இணைந்திருக்கும் பைக்கினை விருபத்துடன் அனுகுங்கள்,..


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2