தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது; கேரளா முழுவதும் கனமழை

 Wednesday, June 12, 2019  01:45 PM

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இந்த மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் கூறியது.


Arunhitech_curom1
அதற்கேற்ப கேரளா முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஓரிரு நாளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கும். குமரி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.

இது மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தின் அரணாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை கொட்டி வருகிறது. மலை கிராமங்களில் வெள்ளப் பாதிப்பை தடுக்கவும், மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கவும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Arunhit

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Arunhitech_sqr2
Real_Ad9
Real_Right2
AdSolar1
Real_Right3