நம்ம ஊரு சமையல் : கோதுமையில் களி செய்வது எப்படி?

 Tuesday, June 11, 2019  07:30 PM

வயதானவர்கள் தினமும் உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமையில் களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு சத்தான கோதுமை மாவு களி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்.

செய்முறை :

Vanavil New1

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.

கோதுமை மாவினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றவும்.

கைவிடாமல் நன்றாக கிளறவும். அப்போது தான் கட்டியில்லாமல் அடி பிடிக்காமல் இருக்கும். நன்றாக வேக விடவும். கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.

சின்ன வெங்காயம், கருவாட்டு குழம்பு, சாம்பார், பொரியல், குழம்பு, தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.

கோதுமை ரவையிலும் இந்த களியை செய்யலாம்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2