ரவா தோசை செய்வது எப்படி?

 Monday, June 10, 2019  07:30 PM

ரவா தோசை பொதுவாக எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் தோசை வகைகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம்.

இனி ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை – 400 கிராம்
மைதா மாவு – 400 கிராம்
பச்சரிசி மாவு – 50 கிராம்
தண்ணீர் – நீர்க்க கரைக்க தேவையான அளவு
முந்திரி பருப்பு – 50 கிராம்
பாதாம் பருப்பு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2 எண்ணம்
மிளகு – 3 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லி இலை – 3 தண்டு
உப்பு – தேவையான அளவு


செய்முறை


Vanavil New1
முதலில் ரவை, மைதா, பச்சரிசி மாவு ஆகிய மூன்றையும் ஒரு சேர நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் உப்பினைச் சேர்க்கவும்.

மாவுக் கலவையில்தண்ணீரினை ஊற்றி நீர்க்க கரைக்க வேண்டும். பின் இக்கரைசலை நான்கு மணி முதல் ஆறு மணி நேரம் வரை நன்கு ஊற விடவும்.

தண்ணீர் சேர்த்ததும்

தோசை வார்க்க அரை மணி நேரத்திற்கு முன் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொத்தலாக அரைத்துக் கொள்ளவும்.

முந்திரி பிஸ்தா

கறிவேப்பிலை, கொத்த மல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

கரைத்து வைத்துள்ள மாவுக் கரைசலுடன் கொத்தலாக அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாம் கலவை, பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, மல்லி இலை, பச்சை மிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றை கலக்கி வைக்கவும். பின் தோசையை வார்க்க தோசைக் கல்லினை அடுப்பில் வைக்கவும். தோசை மாவானது நீர்க்க இருக்குமாறு செய்யவும். தோசைக் கல் நன்கு காய்ந்தவுடன் தோசை மாவினை சிறிய டம்ளரில் எடுத்து கல்லின் வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக மெல்லிய தோசையாக வார்க்கவும். எண்ணெயை தோசை முழுவதும் படுமாறு தெளிக்கவும். தோசை ஒருபுறம் வெந்ததும் தோசை கரண்டியால் திருப்பி மறுபுறம் போட்டு வேக வைக்கவும்.
தோசை வெந்ததும் எடுத்து விடவும். சுவையான மொறு மொறுப்பான ரவா தோசை தயார்.

குறிப்பு

உடனடியாக ரவா தோசை தயார் செய்ய விரும்புவோர் தோசை தயார் செய்ய தேவையான பொருட்களுடன் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து ரவா தோசை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் பிஸ்தாப் பருப்பினைச் சேர்த்தும் தோசை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மைதா மாவிற்கு பதில் கோதுமை மாவினைக் கொண்டும் தோசை தயார் செய்யலாம்.

–ஜான்சிராணி வேலாயுதம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2