பழரசம் உடலுக்கு ஆரோக்கியமானதா?

 Monday, June 10, 2019  03:37 PM

பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது.

பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பெரும்பாலும் நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழரசமாக அருந்துவதால் நார்ச்சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

மற்றும் பழரசமாக பருகும் போது கூடுதலாக சேர்க்கப்படும் சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் போன்றவை மேலும் உங்கள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியவை. பழரசம் பருகுவதை தவறு என்பதற்கு இது போன்ற சில தான் காரணமாக அமைகின்றன...

கடைகளில் விற்கப்படும் பழரசங்கள் அல்லது பானங்கள், உங்களது உடலியக்கத்தை சீர்குலைக்கும் பண்புடையதாக இருக்கிறது. எனவே, கடைகளில் விற்கப்படும் பானங்கள் அல்லது செயற்கை பழரசங்களை வாங்கி பருகுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, பழங்களை அப்படியே சாப்பிடும் முறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

Real_Ad5

பெரும்பாலும் நீங்கள் கடைகளில் பழரசம் வாங்கி பருகும் போது, நீர் கலந்து தான் தருகிறார்கள். இதன் மூலம் உங்களுக்கு அந்த பழத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமலே போகும் நிலை உருவாகிறது.

பழமாக சாப்பிடுவதை ஜீரணிக்க சிறிது நேரம் ஆகும். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆனால், நீங்கள் பழரசமாக பருகும் போது, அது உடனடியாக உடலின் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகிறது.

பழமாக உட்கொள்ளாமல், பழரசமாக பருகுவதால், நார்ச்சத்து, மினரல்ஸ், வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உட்பட பல சத்துகள் உடலுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.

அதிலும், நீங்கள் கடைகளில் வாங்கி பருகும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழரசங்கள், உண்மையில் ஃபிளேவர் சேர்க்கப்பட்ட இரசாயன நீர் தான். அதில் வேறு எந்த சத்துகளும் இருப்பது கிடையாது. எனவே, முடிந்த வரை பழங்களை வாங்கி அப்படியே சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.


Real_Ad7

Arunhit


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


arunhitech_sqr1
Real_Right2
Website Square Vanavil2
Real_Ad1
Real_Right3
AdSolar1