பஞ்சலிங்கம் அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி


Source: dinamani
 Monday, June 10, 2019  11:30 AM

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Vanavil New1
உடுமலை அருகே உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் திருமூர்த்தி மலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள படகு சவாரி, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை இவைகளை ரசிக்கவும் ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கோடையின் வெப்பத்தால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து நின்று போனது.

இதனால், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். குறிப்பாக கோடை விடுமுறையில் இங்கு வந்த மாணவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்கம் அருவியில் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனர்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2