பில்லூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள்

 Monday, June 3, 2019  04:45 PM

கோவை மாவட்டம் காரமடை வனசரகத்திற்குட்ட பரளிக்காடு பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. அணையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றில் பரிசல் சவாரி சென்று மகிழ்கின்றனர். சிலர் மலையேற்றம் செல்கின்றனர். அதோடு பவானி ஆற்றில் குளித்தும், பழங்குடி மக்களால் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டும் சந்தோ‌ஷமாக திரும்வுகின்றனர்.

இங்கு தங்கும் வசதிகள் எதுவும் இல்லாததால் ஒரு நாளைக்குள் அனைத்து இடத்திற்கும் சென்று விட்டு திரும்ப வேண்டிய நிலை இருந்தது. எனவே இங்கு தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கோவை வனத்துறையினர் பரளிக்காடு அருகே உள்ள பூச்சிமரத்தூர் பகுதியில் 5 தங்கும் விடுதிகளை அமைத்து வருகின்றனர்.

சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விடுதிகள் அமைய உள்ளது. வன பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூண்கள் இல்லாமல் முழுவதும் பைபர் மூலம் அமையும் இந்த விடுதிகள் பச்சை நிறத்தால் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

ஒரு விடுதியில் 7 முதல் 8 பேர் வரை தங்க முடியும். இவ்விடுதிகளில் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

Arunhit

விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கும் போது, வன விலங்குகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லாத வகையில் விடுதிகளை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 பரிசல்களில் சுற்றுலா பயணிகள் சவாரி செல்லும் நிலையில் கூடுதலாக 4 பரிசல்களை இயக்கவும் முடிவு செய்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை பரிசல் சவாரிக்கு அழைத்து செல்லும் பணி மற்றும் அவர்களுக்கு உணவு தயாரிப்பது மற்றும் பாதுகாப்பு பணி உள்ளிட்ட பணிகளில் பழங்குடி மக்களை பணியமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் வனத்துறைக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக மட்டுமல்லாமல் பழங்குடி மக்களுக்கு வேலை அளிக்கும் வகையில் அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தங்கும் விடுதிகளின் நாள் வாடகை கட்டணம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விரைவில் அவை திறக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.


Real_Ad8

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


AdSolar1
Arunhitechsqr5
Website Square Vanavil2
Real_Ad9
arunhitech_sqr1
Arunsqr4