சோயா பீன்ஸ் கிரேவி செய்யலாம் வாங்க.....

 Wednesday, May 22, 2019  07:30 PM

சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடியது. சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் தேங்காய் சேர்த்து கிரேவி செய்வது என்பது பார்ப்போம். உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான ஒரு சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் மணிகள் - 2 கப் (ஊற வைத்தது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்

Vanavil New1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி வேகவைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் கிரேவி தயார்.

- Subscribe us on YouTube http://bit.ly/2WEsEc3


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2