நம்ம ஊரு சமையல் : ஆரோக்கியம் தரும் 3 வகை களி!

 Tuesday, May 21, 2019  07:30 PM

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு.

இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்: -

1. கேப்பைக் களி : -

ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம். முதலில் ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம். கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன் வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

களி

பலன்கள் : -

கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது.
கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம்
வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.

2. உளுத்தங்களி : -

தேவையானவை :-

நன்கு அரைத்த உளுத்தம் பருப்பு மாவு - ஆறு கைப்பிடி

கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு

தேங்காய் துருவியது

நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன்

அரிசிமாவு - சிறிதளவு

ஏலக்காய் - நான்கு கிராம்


Vanavil New1
வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு

செய்முறை : -

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர் உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.

பலன்கள் :-

உளுத்தங்களியில் கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும். பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் வாரம் இரு முறையாவது இதைச் செய்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.3. வெந்தயக் களி :-

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 300 கிராம்

உளுந்தம் பருப்பு - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்

செய்முறை :-

புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம்.

பலன்கள் :-

கிராமத்தில் வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும்.

ஆகவே, களி சாப்பிட்டால், நலம் பெருகும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2