கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான, ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


Source: Dinamalar
 Wednesday, May 15, 2019  06:47 AM

கோவையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, 73 ஆயிரத்து, 567 மாணவ, மாணவிகள் 'ஆன்லைன்' மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான, ஆயத்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

தற்போது பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.


Vanavil New1
கோவையில் பிளஸ்2 தேர்வில், 34 ஆயிரத்து, 805 பேரும், பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில், 38 ஆயிரத்து, 762 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்கள் படித்த பள்ளியில் இருந்தே 'ஆன்லைன்' மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வதற்கான, ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.ஏற்கனவே கடந்த காலங்களில் 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஏதேனும் உதவி தேவைப்பட்டால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் உதவ தயாராக உள்ளனர்.வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டவுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்யும் பணி துவங்கும். இந்த காலகட்டத்தில் பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு, ஒரே 'சீனியாரிட்டி' வழங்கப்பட உள்ளது' என்றனர்.Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2