படர்தாமரையை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் சில டிப்ஸ் இதோ...

 Tuesday, May 14, 2019  02:04 PM

படர்தாமரை என்பது உங்களின் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இந்த படர்தாமரையானது உடல் மற்றும் உடைகள் சுத்தமாக இல்லாதவர்களுக்கு பூஞ்சைகளினால் தொற்றப்பட்டு ஏற்படக்கூடியது.

சாதரணமாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த படர்தாமரை அதிகமானால் உடம்பில் கடுமையான சொரியாசிஸ் போன்ற அரிப்பை ஏற்படுத்தும்.

இந்த படர்தாமரை நோயானது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகமாக உண்டாகும்.

பூண்டு

மருத்துவம் குணம் அதிகமாக நிறைந்த பூண்டு படர்தாமரையை போக்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு அதில் பூண்டுகளை நசுக்கி போட வேண்டும்.

பின் அதனை தைலப்பதத்தில் காய்ச்சி வடிக்கட்டி எடுத்துக் கொண்டு படர்தாமரை இருக்கும் இடங்களில் இருவேளைகளில் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் படர்தாமரை விரைவில் குணமாகும்.

Vanavil New1

தும்பை

தும்பை ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை. 2 ஸ்பூன் அளவு தும்பை இலை பசையை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் திரிபலா சூரணம், 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விலகிப்போகும்.

கீழாநெல்லி

கீழாநெல்லியின் இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அதில் 2 பங்கு அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து சிறிய தீயில் வைத்து காய்ச்சி, தைலபதத்தில் எடுத்து ஆற வைத்து பின் அதனை படர்தாமரை உள்ல இடங்களில் பூசி வந்தால், விரைவில் குணமடையும்.

குப்பைமேனி

குப்பைமேனியும் கீழாநெல்லியை போன்று சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. குப்பைமேனியின் இலைகளை ஒரு பங்கு பாத்திரத்தில் எடுத்து அதில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும்.

பின் அதனை சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சி, ஆற வைத்து அந்த தைலத்தை படர்தாமரை உள்ள இடங்களில் பூசி வர படர்தாமரை சரியாகும்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2