உதகை மலர் கண்காட்சி மே 17 ஆம் தேதி தொடங்குகிறது

 Tuesday, May 14, 2019  10:33 AM

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டு தோறும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருட 123 ஆவது மலர் கண்காட்சி வரும் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மே 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதில் மாவட்ட கருவூலம் மற்றும் அரசு சார்பிலான கருவூலகங்களில் அரசின் பாதுகாப்புக்காக அனைத்து அவசர பணிகளை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜூன் 1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக கருத்தப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

Vanavil New1

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருப்பது உதகை அரசினர் தாவரவியல் பூங்கா. இந்தப் பூங்காவின் 100 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் கடந்த 1995 ஆம் ஆண்டில் உதகை அரசினர் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான இப்பூங்காவில் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா மலர் செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சர்வதேச ரோஜா சம்மேளனத்தின் கார்டன் ஆஃப் எக்ஸலென்ஸ் விருதை தால் கடந்த 2006 ஆம் ஆண்டில் பெற்று அதிக அளவிலான ரோஜா மலர் ரகங்களைக் கொண்டு இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவாகத் திகழ்கிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2