பொள்ளாச்சி -புரவிபாளையம் -கோடிஸ்வர சாமிகளின் சமாதி

 Monday, May 13, 2019  08:30 PM

கொங்கு வளநாட்டில் வாழ்ந்த மக்கள் தெய்விக மகான்களை வாழவைத்தவர்கள்.. இவ்வகையில் பொள்ளாச்சியில் புரவிபாளையம் ஜமீனில் மக்களைக் காத்து ரட்சித்தவர்தான் நமது கோடித் தாத்தா

புரவிபாளையம் ஜமீன்தார் வடநாட்டில் குடும்பத்தோடு கடற்கரையில் தங்கள் விடுமுறையை கழித்துவிட்டுத் திரும்பிக் கார் கதவைத் திறந்த போது பூட்டி இருந்த காருக்குள் அமர்ந்திருந்தார் பெயர் தெரியாத பெரியவர் .

>> வயது 100 கடந்த பழுத்த பழமாக இருந்த பெரியவரை பார்த்து திடுகிட்ட ஜமீன்தார் வலுகட்டாயமாக பெரியவரை கீழே இறக்கி விடுகிறார் ..பின்பு ஜமீன்தார் குடும்பம் புரவிபாளையம் அரண்மனை வந்து இறங்கி காரின் பொருள் வைப்புப் பகுதியை திறந்து பார்த்தால் கடற்கரையில் இறக்கி விடப்பட்ட பெரியவர் அங்கே இருந்தார் .... ஜமீன்தார் ஒன்றும் பேசாமல் அமர்ந்த அந்த பெரியவரை தங்கள் அரண்மனையில் தங்க அனுமதிக்கிறார் ..

>> ஜமீன்தார் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்ட பெரியவர் பளபளக்கும் வெண்தோலையும் ஆற்றல் மிக்கக் கண்களையும் கொண்டுள்ளார் யாரிடமும் ஒன்றும் பேசாத மெளன யோகியாகி இருக்கிறார் ..வந்தவர்களில் சிலரை கோடி கோடியாக வாழ வாழ்த்துகிறார் ..''கோடி பேருக்கு அன்னமளி'' என்கிறார் ..மக்கள் கூட்டம் 'கோடி'என சொல்லும் பெரியவருக்கு கோடித்தாத்தா என்றும் கோடி சாமிகள் என்றும் பெயர் வைத்து அழைத்தது ..வந்து பார்த்து வாழ்த்து பெற்றவர்கள் கோடிகளை கண்டனர்..

>> 1980 -ல் கோடித்தாத்தாவை பார்க்க வந்த இசைஞானி இளையராஜா முதன் முறையாக விரட்டப்பட்டார் ..மறுமுறை வந்து ஆசி பெற்றார் ...அது முதல் இசைஞானி இளையராஜா அடிக்கடி தற்போதும் பொள்ளாச்சி -புரவிபாளையம் வந்து செல்கிறார் ..

>> 1959 இல் புரவிபாளையம் வந்தவர் 35 வருடங்கள் கழிந்து 1994 இல் சமாதி அடைந்தார் ..அவர் வயது யாராலும் கணிக்க முடியவில்லை தெய்வீகப் பிறவி பெற்ற மனிதர்களின் ஸ்தூல காலம் அவர்களுக்கே தெரியாது ..காரணம் பிரம்மநிலை பெற்று விட்டால் ஸ்தூலம் , லெளகீகம் ஒன்றும் இல்லை ..1986 இல் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் இருந்து வந்த GERENTOLOGY (வயோதிகம் ,மூப்பியல் துறை ) பிரிவை சேர்ந்த விஞஞானிகள் தாத்தாவின் DNA ,குரோமோசோம் இவற்றை எடுத்து இவர் எந்த காலத்தை சேர்ந்தவர் ? என அறியமுற்பட்டபோது அவர்களால் தெளிவான முடிவுகளைச சொல்லமுடிய வில்லை ..

Arunhit

சுவாமிகளது மகா சமாதியை, புரவிபாளையம் ஜமீனே நிர்வகித்து வருகிறது.

11.10.94 அன்று மதியம் சுமார் 3:30 மணியளவில் மகா சமாதி ஆனார் கோடி சுவாமிகள். இதை அறிந்த ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்ணீருடன் ஓடோடி வந்தனர். ஜமீன் பங்களாவை ஒட்டியே சுவாமிகளுக்கு சமாதி அமைக்கப்பட்டது. நாற்காலியில் அமர்ந்த நிலையில் சுவாமிகளது உடலை கீழிறக்கி, சுற்றிலும் விபூதி, வில்வம், துளசி ஆகியவற்றை நிரப்பினர். மேலே சிமெண்ட் ஸ்லாப் போட்டு சமாதியை மூடினர். அத்துடன், சுவாமிகளது சிரசுப் பகுதிக்கு நேராக சிறு துவாரம் ஒன்று அமைத்து, அதன் மேல் சிறிய சிவலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோடி சுவாமிகளின் சக்தி முழுவதும், இந்த சிவலிங்கத்தில் இருப்பதாக நம்புகின்றனர் இவருடைய பக்தர்கள். எனவே, சமாதியை வலம் வந்து, சிவலிங்கத்தை வணங்கிச் செல்கின்றனர். இங்கு பூசாரி இல்லை; பக்தர்களே அவர்கள் விரும்பியபடி வழிபட்டுச் செல்லலாம்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கோடி சுவாமிகளின் மகா சமாதியைத் தரிசிக்கப் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அமாவாசை, பௌர்ணமி, ஆடி அமாவாசை, சுவாமிகளின் குருபூஜை (அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி) ஆகிய தினங்களில் திரளான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானத்தை இன்னார்தான் நடத்துகிறார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சுவாமிகளின் சமாதி முன் எல்லோரும் சமம். எனவே, பக்தர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை செலுத்துகின்றனர். அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு வந்து குவிப்பர். காய்கறி நறுக்குவது, அரிசி களைவது, சமையல் செய்வது என்று அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.

கோடி சுவாமிகளின் வெளியூர் பக்தர்கள் சொல்வது இதைத்தான்: ''எங்களுக்கு எந்த ஒரு கஷ்டம்னாலும் இஷ்ட தெய்வமான அவரை, இருந்த இடத்தில் இருந்தபடியே மனசார நினைச்சுப்போம். வீட்டு பூஜையறையில் இருக்கிற அவரோட படத்துக்கு ஒரு பூ வெச்சுப் பிரார்த்தனை செய்வோம். ஆரஞ்சு மிட்டாயை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்குக் கொடுப்போம். அவ்வளவுதான்... எங்களோட கோரிக்கையை சுவாமிகள் ஏத்துக்கிடுவார். இப்படித்தான் சுவாமிகள் எங்களுடன் இருந்து ஆசிர்வதித்து வருகிறார்.''

ஆம்! கோடி சுவாமிகள் அருவமாக இருந்து தங்களைக் காத்து வருவதாக அவரது பக்தர்கள் திடமாக நம்புகிறார்கள். சுவாமிகளின் சமாதிக்கு அருகில் சம்மணமிட்டு அமர்ந்து, கண்களை மூடி, பிரார்த்தனை செய்கின்றனர். இன்னும் சிலர், மகா சமாதியில் உறையும் அவரிடம் பார்வையாலேயே பேசுகிறார்கள்; தங்களது சுக- துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

>> தாத்தாவின் அறைக்குள் அவர் உடல் 9 துண்டுகளாக இருந்ததை பார்த்தும் இருகிறார்கள் ..இவ்வகை நிலைக்கு நவகண்ட யோகம் என்றும் பெயர் உள்ளதாம் ...ஒருமுறை வாருங்கள் நல்ல அனுபவங்களை பெறலாம் .. வழிகாட்டும் குருவாக அருள் புரிகிறார் .. ..அமாவாசை , பெளர்ணமி நாட்களில் மக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள் ..பொள்ளாச்சிலிருந்து புரவிபாளையதிற்கு தாராளமாக உள்ளூர் பேருந்து வசதி உள்ளது ...பொள்ளாச்சிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


AdSolar1
arunhitech_sqr1
Website Square Vanavil2
Arunhitechsqr5
Arunsqr4
Arunhitech_sqr2