கேரளா ஸ்பெஷல் : வெள்ளரி தயிர் பச்சடி

 Monday, May 13, 2019  07:30 PM

கேரள மக்கள், விஷேச தினங்களில் வெள்ளரி தயிர் பச்சடி சமைக்காமல் இருக்க மாட்டார்கள். தயிரோடு பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதால், நீண்ட நேரத்துக்கு புளிக்காமல், அதே சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரி : 2 கப் (நறுக்கியது)
தயிர் : 3/4 கப்
பச்சை மிளகாய் : 3
இஞ்சி : 1 துண்டு
தேங்காய் துருவல் : 1 கப்
கடுகு : 2 ஸ்பூன்


கறிவேப்பிலை: சிறிதளவு
காய்ந்த மிளகாய் : 2
எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை:

* வாணலி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, ஐந்து நிமிடம் வேக விடவும்.
* தேங்காய் துருவல், பச்சை மிளகாய், 1 ஸ்பூன் கடுகு ஆகியவற்றுடன், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* வெள்ளரி வெந்ததும், அத்துடன் தேங்காய் கலவையை சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
* தீயை மிதமான வெப்பத்தில் வைத்து, தயிரை சேர்த்து இறக்கிவிடவும்.
* இறுதியாக, தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கி, பச்சடியோடு சேர்த்துப் பரிமாறவும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
AdSolar1
Arunsqr4
arunhitech_sqr1
Arunhitech_sqr2
Arunhitechsqr5